வைணவத்தில் டாக்டர் பட்டம் ! இன்று வைணவத்தை தனியாக படிக்கலாம். டாக்டர் பட்டம் வாங்கலாம். பேசலாம் எழுதலாம். சில நாள் முன் ஒருவர் என்னுடன் பேசும் போது சொன்ன வார்த்தை என்னை யோசிக்க வைத்தது. ”பிராமணர்களை பார்த்தால் எனக்கு ஒரு விதமான பயம். ஜீயர் என் பக்கம் நடந்து சென்றால் எனக்கு உடல் நடுக்கமாக இருக்கிறது!” என்றார். இன்னொருவர் ‘நைச்சிய குணம்’ அதாவது நீச்சனாக இருக்கும் தன்மை வருவது தான் மிக கஷ்டம் என்றார். மாற்று கருத்து இல்லை. பணம், குலம், படிப்பு அதிகமாக இருந்தால் இந்த நீச்ச பாவம் வருவது மிக மிகக் கஷ்டம். பரமபத விளையாட்டில் பெரிய பாம்பி வாயில் அகப்பட்டு கீழே வருவது போல நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும். ஒரு பிச்சைக்காரன் வாச கதைவை தட்டுகிறான் “யாரு அது?” என்று உள்ளேயிருந்து குரல் கொடுக்கிறோம். வெளியே பிச்சைக்காரன் ‘நான் தான்யா’ என்று பதில் கூறுகிறான். அந்த பிச்சைக்காரன் சொல்லும்’நான்’க்கும் நாம் சொல்லும் ’அடியேனுக்கும்’ வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய ’அடியேனில்’ ஒரு வித செயற்கை தனம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. என்றாவது ஒரு நாள் நம் ...