[%image(20061222-andal_drawing_6.jpg|142|183|)%] கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். இந்தப் பாட்டில் ஆண்டாள் கீசுகீசு ஒலி எழுப்பும் ஆனைச்சாத்தனை குறிப்பிடுகிறார். இந்த பறவைக்கு பேசும் ஆற்றல் இருப்பதாகவும் கூறுகிறார். ( இரண்டு வருடம் முன் திருப்பாவை விளக்கம் எழுதிய போது எல்லா புத்தகத்திலும் ஆனைச்சாத்தன் பற்றி எந்த குறிப்பும் எனக்கு கிடைக்கவில்லை. மிகுந்த தேடலுக்குப் பிறகு அது Seven Sisters என்று அழைக்கப்படும் சாம்பல் நிற பறவை என்று தெரியவந்தது. எங்கள் பள்ளிக் கூடத்தில் இந்த பறவையை நிறைய பார்த்திருக்கிறேன். எதைப் பற்றி எழுத வேண்டும் என்றாலும் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு எழுத வேண்டும் என்பது சுஜாதா எனக்கு கற்றுத் தந்த பாடம் ). இன்று திவ்வியப் பிரபந்தத்தில் வரும் சில பறவைகளைப் பற்றி பார்க்கலாம். முதலில் குலசேகர ஆழ்வார...