சில மாதங்கள் முன் 'சித்திர நாலாயிரம்' பற்றி எழுதியிருந்தேன். இரண்டு நாட்கள் முன் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் எனக்கு தன் கைபட ஒரு கடிதம் எழுதியுள்ளார் ( ஈ-மெயில் பார்க்கும் நமக்கு இது போன்ற கடிதங்கள் ஒரு வித மன நிறைவை தருகிறது. அதில் உள்ள ஒரு 'பர்சனல் டச்' ஈ-மெயிலில் கிடையாது) அதில் வரும் நவம்பர் 23 முதல் 26 வரை கீழச்சித்திரை வீதியில் திரும்பவும் ஒரு சித்திர கண்காட்சி நடைபெறுகிறது என்றும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார். இந்த முறை
1. ஸ்ரீ ராமானுஜ தரிசனம் 120 - உடையவர் ராமானுஜர் வாழ்ந்த வருடங்களை நினைவூட்டும் வண்ணம் அவரது கதையை 120 சித்திரங்களாக வைக்க போகிறார்கள். (இதையே புத்தகமாகவும் வெளியிட தீர்மானித்துள்ளார்கள் )
2. 108 திவ்வியதேச தரிசனம் - ஆழ்வார்கள் அமுதமொழியில் 108 திருப்பதிப் பெருமாள்களின் தரிசனம்.
3. ஸ்ரீமத் பகவத் கீதையை ஒரே படத்தில் 700 ஸ்லோகங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளது
4. பெரியாழ்வார் திருமொழி - சித்திரவடிவில்
5. சித்திர அமலனாதிபிரான்
என்று அசத்த உள்ளார்.
என்னால் இச்சமயம் போக முடியாது என்று நினைக்கிறேன். இந்த தேதிகளில் நீங்கள் திருச்சி/ஸ்ரீரங்கம் சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய கண்காட்சி.
கண்காட்சி நடைபெறும் இடம்
ஸ்ரீ நாதமுனி ராமாநுஜ கூடம்
(கீழச்சித்திரை வீதி, கோ ரத மூலை)
ஸ்ரீரங்கம்.
நாட்கள் 23-11-06 முதல் 26-11-06 ( 4 நாட்கள் )
நேரம் : காலை 7 முதல் இரவு 9 வரை
Comments
Post a Comment