Skip to main content

Posts

ரத்த நிலா உருவான கதை

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் ஐந்து அன்று எல்லா நாளிதழிலும் விளம்பரம், கட்டுரை வந்து அடுத்த நாள் பாக்கெட் பால் வாங்கும் போது அதைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறோம். ஜூன் ஐந்து முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது இல்லை என்று முடிவு செய்து, முதலில் டப்பர் வேர் டிபன் பாக்ஸை மாற்றினேன். ஜீன்ஸ் போட்ட பெண் தலையில் பூ வைத்துக்கொண்டது போல என்னை பார்த்தார்கள். “உங்க டயட்டைல் துவும் சேர்ந்ததா ?”  போன்ற கேள்விகளை கடந்து தினமும் பள்ளிக்கரனை வழியாக அலுவலகம் செல்லும் போது அந்த குப்பை மேடுகளில் தான் எவ்வளவு  பிளாஸ்டிக் ! ரங்கநாதன் தெருவில் இரவு 12 மணிக்கு சென்றால் அங்கே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை பார்க்க மலைப்பாக இருக்கும். ஃபேஸ்புக்கில் வரும் செல்ஃபி படங்களை உற்றுப்பார்த்தால் எங்காவது ஒரு பிளாஸ்டிக் இருக்கிறது. நம் தாத்தா பாட்டிகள் பலர் 80 வயசுக்கு மேல் திடமாக வாழ்ந்ததற்கு, தற்போது அதிகமாக கேன்சர் வருவதற்கும் இந்த பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியுமா என்று ஒரு நாள் முயன்று பார்த்தேன். கஷ்டம் தான். இரண்டு நிமிஷம் பட்டியலிட்டேன். பால் பாக்கெட...

கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை மேலே படத்தில் இருக்கும் கல்லை பற்றி தெரிந்துக்கொள்ளும் முன் அதற்கு பின்னால் 800 வருட சரித்திரம் இருக்கிறது. உங்களை சுமார் 800 ஆண்டுகள் பின்னோக்கி ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து செல்ல போகிறேன். ஸ்ரீரங்கத்தில் ராமானுஜருக்கு பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை ஆகியோர் ஸ்ரீராமானுஜரின் நியமனப்படி கோயில் நிர்வகித்து வந்தார்கள். நம்பிளையின் சிஷ்யர்களில் இரு கண்களாக போற்றப்படுபவர் இருவர் - வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும். வடக்கு திருவீதிப்பிள்ளைக்கும் அவர் மனைவி ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கிபி 1205ல் ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் பிள்ளை லோகாசாரியார் அவதரித்தார். ( நம்பிள்ளைக்கு லோகாசார்யர் ( ஜகத்குரு ) என்ற பெயரை கந்தாடைத் தோழப்பர் சூட்டினார் ( இந்த வைபவத்தை பிறகு ஒரு கட்டுரையில் எழுதுகிறேன் ). தன்னுடைய பிள்ளைக்கு தன் ஆசாரியன் பெயரை சூட்ட விரும்பி ’லோகாசார்யர்பிள்ளை’ என்று பெயர் சூட்டினார். அதுவே பிள்ளை லோகாசார்யன் ) இவரும் இவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய இருவரும் ஸ்ரீவைஷ்ணவ தொண்டிற்கு குடும்ப வாழ்கை ஒரு தடையாக இருக்க ...

ரத்த நிலா

உலகெங்கும் அந்த செய்தி பல மொழிகளில் பரவியிருந்தது. மின்சாரம் இல்லாத கிராமம், பிரதமர் செல்லாத நாடு என்று எங்கும் இதே பேச்சு. நடிகைகள் அடிக்கடி குந்தலை வருடுவது போல பலர் மொபைலை வருடி அந்த செய்தியை வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அனுப்பினார்கள். முகநூலில் திகட்ட திகட்ட மீம்ஸ் ஜோக் போட்டு உலகத்தில் ஜீவிப்பதை இளைஞர்கள் உறுதிசெய்தார்கள். டிவியில் விவாதித்தார்கள். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடுக்கு முன் “வதந்திகளை நம்பாதீர்கள்” திரையரங்குகளில் முந்திக்கொண்டது. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று  யோசிக்காமல் எல்லோரும் மாற்றினர். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலம் அல்லாமல் அப்பக்குடத்தான், அன்பிலிலும் கூட்டம் வழிந்தது. வேளாங்கனி, நாகூர் தர்கா என்று எதையும் விட்டு வைக்கவில்லை. யார் முதலில் இந்த செய்தியை பரப்பினார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது....

ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள்

இன்று மாலை(செப்-23, 2015) முனைவர் ஸ்ரீ.உ.வே இரா.அரங்கராஜன் ஸ்வாமிகளை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் அவருடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ திவ்ய பிரந்தம் திருவாய்மொழி பாடத்துக்கு இவர் தான் விரிவுரையாளர். ’நம்பிள்ளை உரைத்திரன்’ ஆய்விற்காக இவருக்கு காமராசர் பல்கலைக்கழகம் (1981) முனைவர் பட்டம் வழங்கியது. ஸ்ரீவைஷ்ணவ நூல்களை முறைப்படி பெரியோர்பால் பயின்றவர். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே.அண்ணங்கராசார்யார் ஸ்வாமியால் ”கலை இலங்கு மொழியாளர்” என்ற பாராட்டுப் பெற்றவர். பல ஸ்ரீவைஷ்ணவ நூல்களை பதிப்பித்துள்ளார். ஸ்ரீராமானுஜர் பற்றி பல விஷயங்கள் பேசினோம். தற்போது அவர் “ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள் ஒரு தொகுப்பு” என்று நமக்கு அதிகம் தெரியாத ஸ்ரீராமானுஜ தாசர்கள் பலருடைய வாழ்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதன் கையெழுத்து பிரதியை என்னிடம் ஆசையாக காண்பித்தார். முத்து முத்தாக கை எழுத்து. அச்சு அடிக்க வேண்டாம், அப்படியே நகலெடுத்தால் போதும் என்றேன். அழகான தமிழில் கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தாசர்களை பற்றி ஆய்வு செய்து, எழுதியுள்ளார். புத்தகம் இன்னும் நான்கு...

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்

பெரிவாச்சான் பிள்ளை - சேங்னூர் காலை 6 மணிக்கு கும்பகோணம் வந்த போது சீமாட்டியுடன் சிட்டி யூனியன் வங்கியும் வரவேற்றது. பித்தளை பாய்லர் குளித்துவிட்டு விபூதி பட்டை அடித்துக்கொண்டு தூங்கி வழிந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு டீ கொடுத்துக்கொண்டிருந்தது. மினி பஸ்ஸில் ஏறிய போது அதில் ’சகலமும் கிருஷ்ணார்ப்பணம்’ என்று உணர்ந்தேன்; பஞ்சு மிட்டாய் பாக்கெட், கீரைக்கட்டு, முருங்கை, பூ கூடை... தலைக்கு மேல் உள்ள கைபிடியில் லுங்கி, பனியன் உலர்ந்துக்கொண்டு. இதன் மத்தியில் எனக்கு உட்கார இடமும் கிடைத்தது பெரிய பாக்கியம். கும்பகோணத்திலிருந்து சேங்கனூர் சுமார் 15 கிமி தூரத்தில் இருக்கிறது. அந்த பேருந்தில் "ஊர தெரிஞ்சுக்கிட்டேன்" பாடலை காலை 6.30 மணிக்கு எதிர்பார்க்கவில்லை. பாடல் முடிந்தவுடன் டிரைவர் ஸ்டியரிங்கை விட்டுவிட்டு ரிமோட்டை தேடி திரும்பவும் அதே "ஊர தெரிஞ்கிட்டேன்" மறு ஒலிபரப்பு செய்தார், கொஞ்சம் அதிக சத்தத்துடன். இரண்டாவது முறை பாடல் முடிந்தவுடன் சேங்கனூர் வந்துவிட்டது. இரண்டு காத தூரம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இரண்டு காது வலிக்கும் தூரம். மெயின் ரோடிலிருந்து ஒரு மைல...

காக்கா

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார் சில மாதங்களுக்கு முன் தி.நகரிலிரிந்து தாம்பரம் சானிடோரியத்துக்கு குடிபெயர்ந்தேன். ஸ்ரீவைஷ்ணவர்கள் அதிகம் இருக்கும் இடம் அதனால் சரவணபவன் கூட கிடையாது என்பது முதல் ஆச்சரியம். பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களைவிட கொசு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரிஸ்க் எடுக்காமல் முதல் வேலையாக நெட்லானை வெல்கரோ கொண்டு கதவை விட்டுவிட்டு ஜன்னல் பொன்ற சின்ன ஓட்டைகளை அடைக்க ஏற்பாடு செய்தேன். பக்கத்துவிட்டு முருங்கை மர குப்பை உள்ளே வராமலும், நான் தாளித்தால் கடுகு கூட ஜன்னல் வழியாக வெளியே போகாதபடி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்தேன். பெங்களூரில் ஒரு வாரம் வாசம் முடித்துவிட்டு செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினேன். காலை ஐந்தரைக்கு வீட்டை திறந்தால் எல்லாம் அலங்கோலமாக இருந்தது. ஷூராக் கீழே விழுந்து, நியூஸ் பேப்பர் கலைந்து, வீடு முழுக்க ஏதோ மஞ்சள் திரவம்... கூடவே வயிற்றை குமட்டிக்கொண்டு எலி செத்த நாற்றம். செத்த எலி எங்கே ? எங்கிருந்து வந்திருக்கும் என்று காலை ஆறு மணிக்கு ஆராய...

ராமானுஜலு உருவான கதை

” ராமானுஜலு பற்றியும் எழுதுங்களேன்”... ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் செய்ய கூடாது - பகவத அபச்சாரம்( நாராயணனே நமக்கே பறை தருவான்!), பாகவத அபச்சாரம். இதில் பாகவத அபச்சாரம் செய்யவே கூடாது. அந்த அபச்சாரத்தை பெருமாள் கூட மன்னிக்க மாட்டார். கூரத்தாழ்வாருக்கு கண்ணிழந்த போது, உடையவர் அவரை பார்த்து உமக்கு இந்த நிலையா ?” என்று கேட்ட போது அதற்கு கூரத்தாழ்வார் ”யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண் கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ” என்று பதில் அளித்தார். அவருக்கே இந்த நிலமை என்றால் நம் போன்றவர்களுக்கு ? ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீசூர்ணம் கூட இட்டுக்கொண்டு வெளியே போக வெட்கப்படும் இந்த காலத்தில் நாயுடு சமுகத்தினர் நெற்றி நிறைய திருமண் தரித்துக்கொண்டு கோயிலில் “அங்கே போய் நில்லு” என்று அந்த பாகவதர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் துளிக்கூட Ego இல்லாமல் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் காண்பிக்காமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று யோசித்ததுண்டு. இதை வைத்துக்கொண்டு எழுதியது தான் ராமானுஜலு கதை. ஸ்ரீராமானுஜர் பாஞ்சஜன்யம் ( சங்கு ) அம...

பெருங்காயம் உருவான கதை

” அப்பாவின் ரேடியோ ” சிறுகதை பற்றி ஆமருவி தேவநாதன் தன் வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளார் . அவருக்கு என் நன்றி. கடைசியில் “இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.” என்று விண்ணப்பம் செய்துள்ளார். எழுதலாம். ஆனால் ரொம்ப போஸ்ட்மார்டம் செய்தால் சிறுகதை சுவைக்காது. சுஜாதாவுடன் பழகிய நாட்களில் அவர் எழுதும் சிறுகதைகளை பற்றி என்னிடம் விவரிப்பார். குறிப்பாக விகடனில் எழுதிய ஸ்ரீரங்கத்துக் கதைகளைப் பற்றியும் அதை ஒட்டி நடந்த உண்மையான சம்பவங்களை பற்றியும் என்னிடம் சொல்லியிருக்கிறார். யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பாக்கியமாக இதை நான் கருதுகிறேன். அவர் என்னிடம் அடிக்கடி சொல்லிகொடுத்த விஷயம் “details... details". அது இருந்தால் தான் ஒரு வித கதைகளுக்கு  நம்பகத்தன்மை வரும். முதல் விஷயமாக ”பெருங்காயம்” சிறுகதைப் பற்றி. ஒரு முஸ்லீம் நண்பர் ஸ்ரீவைஷ்ணவர்களை காட்டிலும் பிரபந்தங்களை அழகாக ஒப்பித்தார் என்ற ஒற்றை வரியில் கதை இருப்பதாக தோன்றியது. ஆனால் முஸ்லீம், பிராமணர் பற்றி எழுதுவது கத்தியில் நடப்பது போல. எங்கள் தாத்தா கும்பகோணம் - பாபநாசம் பக்கம் மாளாபுர...

ஸ்ரீஆளவந்தார், திருமங்கை ஆழ்வாருடன் ஒரு நாள்.

31-7-15 ஸ்ரீ ஆளவந்தாருடைய திருநட்சத்திரம். ஸ்ரீஆளவந்தார் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தொகுத்தளித்த ஸ்ரீமந் நாதமுனிகள் பிறந்த ஊர். அவரது பேரனும் ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சாரியரும் ஆன ஆளவந்தார் அவதரித்த ஸ்தலம் காட்டுமன்னார் கோவில். ஆளவந்தார் திருநட்சத்திரம் அன்று ஆளவந்தாருடைய அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று திடீர் முடிவெடுத்தேன். (கடந்த வருடம் ஆளவந்தார் குறித்து எழுதிய சிறு குறிப்பு இறுதியில் இணைத்துள்ளேன்.) ரயில், பேருந்து, ஆட்டோ என்று எல்லா இடங்களும் ”விண்டோ சீட்” கிடைத்து எங்கே திரும்பினாலும் ‘அப்துல் கலாம்’ கண்ணீர் அஞ்சலியும், வீரவணக்கம் போஸ்டர்களும் கண்ணில் பட்டது. காட்டுமன்னார் கோயில் குளம் தனியாகச் சென்ற இந்தப் பயணம் எனக்கு பல உலக விஷங்களைக் கற்றுத்தந்தது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயிலுக்கு பேருந்தில் சென்ற போது என் பின்இருக்கைகளில் சிலர் வந்து ஏறிக்கொண்டார்கள். அவர்களைப் பார்த்த போது ‘உடமைகளை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று உள் மனது எச்சரித்தது. தூங்காமல் கண்விழித்து காட்டுமன்னார் கோயில் பேருந்து ந...