தி ‘Great’ காவிரி மேலே பார்க்கும் இந்த வரைபடம் வெள்ளை காரன் காலத்தது. அதில் காவிரி நதிக்கு முன் ‘Great’ என்று இருப்பதை பலர் கவனித்திருக்க மாட்டார்கள். Great என்றால் ’பெருமையான’, ’பெரிய’ என்று பல அர்த்தங்கள் இருக்கிறது. அக்பர், அலெக்சாந்தர் போன்றவர்களுக்கு இருக்கும் இந்த ’கிரேட்’ அடைமொழி ஏனோ ராஜ ராஜ சோழன் போன்றவர்களுக்கு இல்லை. யோசிக்கலாம். வாஞ்சியின் உயிர்தியாகத்தை மறந்து ஆஷ்துரைக்கு நினைவிடம் அமைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். போகட்டும். வெள்ளைக்காரன் காலத்து மேப்பில் இருக்கும் இந்த ’கிரேட்’ இப்போது இல்லை ஏன் என்று யோசிக்கலாம். கிரேட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்குக் காவிரி என்றுமே புனிதமானவள். பட்டினப் பாலை, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், மணிமேலகை, பாரதம், கம்பராமாயணம் என்று எல்லாவற்றிலும் ஓடுகிறது. ஸ்ரீரங்கத்துக்கு எந்த வழியாகச் சென்றாலும், முதலில் நம் கண்ணில் படுவது காவிரி தான். பார்த்தவுடன் அதை வணங்க வேண்டும். காவிரிக்கு பல பெருமைகள் இருந்தாலும், காவிரி நீரை ஒரு முறை பருகிவிட்டால் அருள் கொடுக்காமல் இருக்காது. ஜ...