Skip to main content

பதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரும் ?

பதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரும் ? 

சிலர் புத்தகம் எப்போது வரும் என்று கேட்கிறார்கள்,  பலர் எப்போது வரும் என்று கேட்கத் தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

பிழை திருத்தம் முடிந்து பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீரங்க நாச்சியாரும், ஸ்ரீ நம்பெருமாளும் சேர்த்தி கண்டருளும் போது புத்தகம் அச்சடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட முடிவு பெறும் நிலையில் இருக்கிறது. 

புத்தகத்தின் முன் அட்டையில் நம்பெருமாள் சேவை சாதிக்க பின் அட்டையில் ஆழ்வார்கள் கோஷ்டியாக எழுந்தருளியிருக்கிறார்கள். படங்களைக் அன்புடன் கொடுத்து உதவிய D Sudhakaran Sudhas , Sowbaktha Gopala, SriRengaVilasam  அவர்களுக்கு நன்றி.  

புத்தகம் அச்சாகும் முன் கடைசியாகப்  புத்தகம் வெளியீடு செய்யும் நாளையும் அதில் குறிப்பிட்டு அச்சடிக்க அனுப்பினேன். அந்த நாள் வரும் சித்திரை திருவாதிரை ( 18-ஏப்ரல் ) ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம். 

புத்தகம் ஸ்ரீரங்க நாச்சியார், உறையூர் நாச்சியார், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருவாலிதிருநகரி திருமங்கை மன்னன் இவர்களுக்கு அனுப்பிய பின் மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  

உடையவர் திருநட்சத்திரத்துக்கு புத்தகம் உங்கள் கையில் இருக்கும். 

அடியேன்,
சுஜாதா தேசிகன்
3-4-2021
படங்கள் வீடியோ கீழே 

--------------------------







Comments

  1. Thanks for the information. Yesterday only my son Venkaram Bharadwaj, has transfered the amount to RDMC Trust for One Copy of the book.
    Brahmanyan.
    Bangalore.

    ReplyDelete
  2. Thanks for the information. Yesterday only my son Venkaram Bharadwaj, has transfered the amount to RDMC Trust for One Copy of the book.
    Brahmanyan.
    Bangalore.

    ReplyDelete
  3. எனக்கு ஒரு புத்தகம் வேண்டும். அதன் விலை என்ன? யாருக்கு அனுப்ப வேண்டும்? வங்கி டிரான்ஸ்பர்மூலமா? என் முகவரி: 288 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை 600086. email id: sundara.krishnamoorthy@gmail.com

    ReplyDelete
  4. எனக்கு புத்தகம் தேவை. தங்களது போன் எண் தந்தால் மிகவும் நல்லது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. எல்லா தகவல்களும் இதில் இருக்கிறது. https://sujathadesikan.blogspot.com/2021/02/blog-post_27.html

      Delete

Post a Comment