ஒரு பெண்ணின் கதை அந்தப் பெண்ணின் பெயர் தேவை இல்லை. அவளுடைய தந்தை நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். பிள்ளையாண்டான் பெயர் விமல். அப்பாவின் கொள்ளுத்தாவுக்கு ஏதோ உறவு. இவன் தான் உனக்கு ஏற்றவன் என்றபோது, அப்பாவின் பேச்சைத் தட்டவில்லை “சரிப்பா” என்று ஒற்றை வார்த்தையில் சம்மதித்தாள். பையன் பார்க்க லட்சணமாக ராஜா மாதிரி இருந்தான். வெளிநாட்டுப் பையன் செல்வத்துக்கு எந்தக் குறைவும் இல்லை. திருமணத்துக்குப் பையன் இரண்டு வாரம் விடுப்பில் வந்திருந்தான். அவளுக்கு அருமையான நெக்லெஸ் & பெண்டண்ட் பரிசாகக் கொடுத்தான். இவனை மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பையனிடம் எந்த வெட்டிப் பந்தாவும் இல்லை, எல்லோரிடமும் சகஜமாகப் பேசி அவர்களுடன் மைசூர் பாக், லட்டு என்று சாப்பிடவிட்டு, கல்யாணம் செய்த கையோடு ”இதோ வருகிறேன்” என்று வெளிநாட்டுக்குச் சென்றான். அதற்குப் பிறகு அவனிடமிருந்து மின்னஞ்சல், மொபைல்... எந்தத் தகவலும் இல்லை. அவனுடைய நம்பரைத் தொடர்பு கொண்டால் “நீங்கள் தொட...