Skip to main content

கண்ணன் கதைகள் - 3

கண்ணன் கதைகள் - 3 



ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன். 

கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில் 

"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை " மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன். 

பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன். 

ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்‌ஷாவிற்கு  ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப் பதில் ‘ராதே கிருஷ்ணா’ தான். 

ஊர் தலைவரான நந்தகோபர் மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்துச் சொல்லும் இடத்துக்குப் பக்கம்  குழந்தைகளைப்  பார்க்க கார்டூன் குழந்தைகள் மாதிரியே இருக்கிறார்கள்.  கண்களில் அவ்வளவு innocence. உற்றுப் பார்த்தால் அன்று கண்ணனுடன் விளையாடிய குழந்தைகள் போலவே இருந்தார்கள். சந்தேகம் இருந்தால் நான் எடுத்த படங்களை பார்க்கவும் 

- சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி

Comments

Post a Comment