Skip to main content

கண்ணன் கதைகள் - 5

கண்ணன் கதைகள் - 5 




துவாரகை முழுவதும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். காரணம் எல்லோர் இடத்திலும் இருக்கும் கிருஷ்ணப் பக்தி. 

தொலைப்பேசி வந்தால் ஹலோ என்று சொல்லாமல் "ஜெய் துவாரகாதீஷ்" என்கிறார்கள். 

கோயிலில் இருக்கும் காவல்துறையினர் எல்லோரும் பக்தியுடன் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். எங்களுடன் வந்த ஒருவர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார் அதை ஒரு காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டினார். கண்ணனுக்கு மரியாதை!

எல்லோருக்கும் ஒரே க்யூ தான். ஆதிஷேசன் மாதிரி வளைந்து நெளிந்து போகிறது. . 250, 100, 50 என்ற சிறப்புப் பக்தி இங்கே இல்லை. சாதாரண க்யூ, அசாதாரணமான பக்தி.  எங்களுடன் ஒரு காவல்துறை உயர் அதிகாரி கூட வரிசையில் தான் வந்தார் !



ஏந்த சீட்டும் இல்லாமல் நேற்று 3000 பேருக்கு மேல் குறையில்லாமல் எல்லோருக்கும் சேவை சாதித்தார் துவரகாதீஷ். ஒரு முறை இல்லை பல முறை! 

என்ன காரணம் என்று யோசித்தால் ஆட்சி செய்பவர்களுக்குத் தெய்வப் பக்தி இருக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு கொள்கை கட்சி அங்கே இல்லை. 

கிருஷ்ணர் சாரி கண்ணன் காலை 5 மணிக்குச் சின்ன துண்டுடன் டிரஸ் போட ஆரம்பித்தார் 8 மணிக்கு வைர கிரீடம் போட்டுக்கொண்டு எல்லோருக்கும் சேவை சாதித்தார். என் பக்கம் இருந்த ஒருவர் எனக்கு ரன்னிங் கமெண்டரி கொடுத்தது என் பாக்கியம்.  இன்று பூர்ணிமா சிறப்புக் கிரீடம் சாத்திக்கொள்கிறார். என்றார். 

ஊரெல்லாம் நெய், பால், தயிர் ஓடுகிறது. பாக்கெட் பால் போன்றவை இங்கே இல்லை!.  பிரசாதங்கள் ரப்ரி (பாசுந்தி), பூந்தி, பயத்தை மாவு, கோதுமை லாடு, பெரிய பாதுஷா, பழங்கள், தேங்காய், வெள்ளரி பச்சடி, தயிர், பால், வெண்ணெய், இரண்டு விதமான மைசூர் பாக், காரா பூந்தி, பேடா, ஶ்ரீகந், நெய்யில் செய்த உருளைக் கிழங்கு கறியமுது, பீடா கூட சப்பிடுகிறார். 

 சிலவற்றைச் சுவைத்துப் பார்த்தேன். எண்ணை என்ற ஒன்று இந்த ஊரில் இல்லை எல்லாமே நெய் தான். 



இன்று எங்களுக்கு ஸ்பெஷலாக குட்டி கிருஷ்ணன் தொட்டிலில் ஆடினான். அந்தத் தொட்டில் அலங்காரத்துக்கு அடியேன் அலங்காரம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. கிருஷ்ணருக்குச்

சின்ன இராட்டினம் சுற்றவிடுகிறார்கள், பம்பரம், கிலுகிலுப்பை, என்று மென்மையான இசையுடன் விளையாட்டு காமிக்கிறார்கள்.

கோயில் அலுவலகத்தில் கேட்டு கோயிலைக் கொஞ்ச நேரம் சுத்தம் செய்தேன்.

ஊரில் எங்கும் கலர் கலராக கிருஷ்ணருக்கு டிரஸ், மாலை, கிரீடம் விற்கிறார்கள்.

ரிடையர் ஆன பின் வரலாம் என்றில்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஒரு முறை சேவித்துவிடுங்கள் 

- சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி

Comments

Post a Comment