Skip to main content

கண்ணன் கதைகள் - 2

கண்ணன் கதைகள் - 2 



ஈட்டில் "மிளகாழ்வான் வார்த்தை" என்று வருகின்றது. அரசன் ஊர்மக்களுக்கு நிலங்களை தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றார். அவரும் தானம் பெறச் செல்லுகின்றார். 

அவரைப் பார்த்த அரசன் “உமக்கு தானம் கொடுப்பதில்லை' என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், "பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்” என்கிறார். 

இதற்கு அரசன் ”உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான் சொல்ல வில்லையே!” 

உடனே மிளகாழ்வான் “அப்படி என்றால் ஏன் தானம் கொடுக்க மறுக்கிறீர்?” என்று கேட்க, அரசன் "நீர் ஸ்ரீவைஷ்ணவராகையாலே உமக்குக் கொடுக்க நான் விரும்பவில்லை "என்று மறுமொழி தருகின்றான். 

உடனே மிளகாழ்வான் பரமானந்தம் அடைந்து கூத்தாடுகின்றார். 

மேல்கோட்டையில் மிளகாழ்வான் இருக்கும் தூணைக் கண்டுபிடித்துச் சேவித்தபொழுது....பெயருக்கு ஏற்றமாதிரி மிளகு அளவில் தான் இருக்கிறார் !

ஸ்ரீரங்கம் வேணுகோபாலன் சன்னதியில் இதே போல மிளகாழ்வான் அளவுக்குக் கண்ணன் சிற்பம் ஒன்று இருக்கிறது. பார்க்கவில்லை என்றால் அடுத்த முறை சொல்லும் போது பாருங்கள். 

அங்கே ஒரு யானை சிற்பமும் அதே மிளகு அளவுக்கு இருக்கு.  ஒருவர்  "சார் உங்கள் கட்டை விரலை அதன்மேல் வைத்து பாருங்கள், அந்த சைஸ்தான் இருக்கும்" என்றார். இது போல பலர் தங்கள் கட்டைவிரலை வைத்ததால் யானைக்குத் தினமும் தைலக்காப்பு நடந்து இன்னும் கருப்பாக ஆகிவிட்டது. எப்படியும் யானை கருப்புதானே!

- சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி

Comments

  1. மிளகாழ்வார் கூத்தாடியதன் காரணம் அருமை

    ReplyDelete

Post a Comment