Skip to main content

Posts

டெலிஃபோன் மணி போல் ...

[%image(20090728-teleCartoon.jpg|115|115|Tele Cartoon)%] ஒன்பதாவது படிக்கும் போது  ஜெரோம் கே.ஜெரோம் (Jerome.K.Jerome)  எழுதிய தொலைப்பேசி பற்றிய நகைச்சுவைக் கட்டுரை எங்களுக்குப் பாடமாக இருந்தது. இந்தக் கட்டுரையை படித்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைப்பேசி இல்லை. தொலைப்பேசிக்கு பக்கத்துக் கடைக்குப் போக வேண்டும். சில ஆண்டுகளில் தொலைப்பேசி வீட்டுக்கு வந்துவிட்டது. சினிமாவில்தான் சிகப்பு, பச்சை நிறத் தொலைப்பேசி எல்லாம் பார்க்க முடியும். எங்கள் வீட்டுக்கு வந்தது சாம்பல் நிறம். ஆள்காட்டி விரலைப் போட்டு சுழற்ற வேண்டும். இந்தச் சுழற்சி முறை எப்படி வேலை செய்கிறது என்று போன வருஷம்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். (டெலிகாம் கம்பெனியில் இருந்துகொண்டு இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?) மவுத்வாஷ் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் மாதத்துக்கு ஒரு முறை ஒரு அக்கா ஜோல்னா பையுடன் வந்து, "என்ன பாட்டி சௌக்கியமா?," கேட்டுக்கொண்டே தொலைப்பேசியை மஞ்சள் துணியைக் கொண்டு துடைத்துவிட்டு, பேசுமிடத்தில் வாசனை ஸ்டிக்கர் ஒட்டிவிட்டுப் போவாள். தற்போது ஒரு ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். பெட்...

கரும்புப் பூவும் சோம்நாத்பூரும்.

எங்கள் அலுவலக கேண்டீனில் பெங்களூர் மைசூர் சுற்றுலா தலங்களின் படங்கள் பெரிய சைஸில் அலங்கரித்திருக்கும். சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல் அந்த கொலாஜில் ஒரு கோயில் மட்டும் தனியாக வசீகரிக்கும். தினமும் சாப்பிடும்போது கோயில் பக்கம் உட்கார்ந்து சுமாரான சாப்பாட்டையும் ரசித்துச் சாப்பிட்டிருக்கேன். படத்தில் ரசித்த அந்தக் கோயிலுக்கு மார்ச் மாத ஒரு சனிக்கிழமை திடீரென 'சரி கிளம்புங்க' என்று குடும்பத்துடன் கிளம்பினேன் - சோம்நாத்பூர்! பெங்களூரிலிருந்து 140கிமீ தூரத்தில் சோமநாத்பூர் என்ற அமைதியான சின்ன கிராமமும் இந்தப் பழமையான கோயிலும் இருக்கின்றன. கிபி 1268ல் ஹோய்சாளர்களால் கட்டப்பட்டது. ஹோய்சாளர்கள் கடைசியாகக் கட்டிய பெரிய கோயில் என்கிறார்கள். பேலூர், ஹலேபிடிலும் இந்த மாதிரி கோயில்கள் இருக்கின்றன. ஆனால் சோம்நாத்பூர் கோயில் முழுமையாக இருக்கும் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயில் மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கட்டப்பட்டது என்ற குறிப்பும் இருக்கிறது. "சார் கனகபுரா வழியா போனால், மாளவல்லி கிராமம் வரும்... " போன்ற தகவல்க...

வின்க்ஸ் கிளப்

[%image(20090702-Winxclubandpixies.jpg|140|200|winx club)%] "வின்க்ஸ் கிளப்?" என்றேன் ஒன்றும் புரியாமல்.. "இது கூட தெரியாதாப்பா உனக்கு!" என்று என் லேப்டாப்பை அபகரித்து, www.winxclub.com என்று டைப் அடித்துக் காண்பித்தாள். "என்னது இது?"   "இதோ இதுதான் நான் ஃபிளோரா."   "ஃபிளொராவா?" "ஆமாம் ஸ்கூல்ல நான், ஐஸ்வரியா, வேதிக்கா எல்லாம் சேர்ந்து வின்க்ஸ் கிளப் ஆரம்பிச்சிருக்கோம்." "ரோஹித் அந்த கிளப்ல இல்லையா?" "நோ" "அப்ப இது லேடீஸ் கிளப்பா?" "லேடீஸ் இல்லப்பா. கேர்ல்ஸ்!" "நேத்திக்கி ஸ்டெல்லா எனக்கு ஸ்டிக்கர் எல்லாம் கொடுத்தா" "ஸ்டெல்லா?" "நான் ஃபிளோரா. ஐஸ்வரியா தான் ஸ்டெல்லா. என்னப்பா நீ, இது கூட தெரியாதா?" "சரி" "அவ லன்ச் சாப்பிடரப்போ எனக்கு சப்பாத்தி எல்லாம் தருவா. ராஜஸ்தானி பிக்கிள் ரொம்ப நல்லா இருக்கும்பா" "ஓ" "அவ மதர்டங் தெலுங்கு. ஆனா அவ தமிழ்ல பேசுவா. அவ அப்பா வேற ஒரு கல்யாணம் செஞ்சுக்க போறாளாம்" "அப்படியா?...

ஏணி, தோணி, வாத்தியார், நார்த்தங்காய்

NaOH + H2SO4 --> Na2SO4 + H2O போன்ற சமன்பாடு (equations) இன்றும் எனக்கு சமன்படுத்த்த (balance)  தெரியாது. ஏன் என்று சொல்வதற்கு முன் கெமிஸ்டரி வாத்தியார் நட்ராஜன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். வவீபூதி இட்டுக்கொண்டு  பார்க்க பளிச்'சென அழகாக இருப்பார். . என்னைக் கண்டால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நான் எங்கே உட்கார்ந்திருந்தாலும், கண்டுபிடித்துவிடுவார். விடை தெரியாத கேள்வியாகக் கேட்பார். முழிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் உடனே வெளியே அனுப்பிவிடுவார். வெளியே என்றால் ஒரேயடியாக உல்லாசமாக உலாத்தமுடியாது. வகுப்பறைக்கு வெளியே கதவின் பக்கத்தில் நின்றுகொண்டே பெருமாள் சேவை மாதிரி பாடத்தைக் கவனிக்க வேண்டும் (அல்லது கவனிப்பதுபோல் பாசாங்கு செய்யவேண்டும்). எதிர்ப்பக்க ஜன்னல் வெளிச்சத்தில் கிளார் அடிக்கும். கரும்பலகை பாதி கருப்பாகவும்,  பாதி வெளுப்பாகவும் தெரியும். சிவபெருமானுக்கு முன்பு நந்தி உட்கார்ந்துகொண்டு இருக்கும், நான் நடராஜனுக்கு முன் நின்றுக்கொண்டு இருப்பேன் அவ்வளவு தான் வித்தியாசம். நாளடைவில் ஸ்டாஃப் ரூமிலிருந்து சக வாத்தியார்கள்...

அட அட ads - 2

இரண்டாம் பகுதி [  பகுதி -1   ] [%image(franchoil.gif|100|100|Franch)%] லக்ஷ்மணருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமார் சஞ்சீவி பர்வதம் கொண்டு வந்தார் என்று படித்திருக்கிறோம். அந்தக் காலத்தில் ஃபிரான்ச் ஆயில் NH இல்லாததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இருந்தால் அனுமார் அதை ஒரு பாட்டில் கொண்டு போயிருப்பார்.  இன்று வரை NH என்பதன் அர்த்தம் என்ன என்று தெரியாது. விளக்கெண்ணையின் கெமிக்கல் பெயர் என்று நினைக்கிறேன். கை, கால் பிடிப்பு, மூட்டு வலி, சுளுக்கு, பிரசவத்தின் பின் வயிற்றில் வரும் ஸ்ட்ரெச் மார்க், மாதவிடாய் வயிற்று வலி, சேற்று புண், பித்தவெடிப்பு, நெருப்புக் காயம், தலை மயிர் வளர்வதற்கு, வளர்ந்த மயிர் உதிராமல் இருப்பதற்கு என்று அடுக்கிக்கொண்டே போய் தாளிப்பதற்கு தவிர மற்ற எல்லாவற்றுக்கும் "ஃப்ரான்ச் ஆயில் NH எங்கப்பா?" தான். பாம்பே ஞானம் சிபாரிசு.    இதே போல் அடுத்த சஞ்சீவினி  - அஞ்சால் அலுப்பு மருந்து. பித்தம், வாந்தி, மயக்கம், கை-கால் பிடிப்பு, தலைவலி, மூட்டுவலி என்று எது இருந்தாலும் இதைச் சாப்பிடலாம். திலீப் இசை அமைத்த பல விளம்பரங்க...

அட அட ads - 1

இந்த பதிவு விளம்பர இடைவேளை இல்லாமல் விளம்பரங்கள் பற்றிய (பெரிய) பதிவு. வேலை இருப்பவர்கள் லீவு நாளில் படிப்பது உத்தமம்.  [%image(colgate_toothpowder.jpg|102|102|Colgate)%] போன வாரம் உளுத்தம் பருப்பு வாங்க கடைக்குப் போனபோது தான் கோல்கேட் பல்பொடி இன்னும் கடைகளில் இருப்பது தெரியவந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு பழைய  கோல்கேட் டூத் பவுடர் விளம்பரத்தில் பயில்வான் பாலும் பாதாமும் தன் மனைவியிடம் கேட்க, "உடலுக்கு பாலும் பாதாமும்; ஆனா பல் துலக்க கரியா?" என்று அவர் வாயின் உட்புறத்தில் உள்ள சொத்தைப் பல்லைக் கிளோசப்பில் காண்பிப்பது தான் நினைவுக்கு வந்தது. எனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் டப்பிங் விளம்பரம் இது என்று நினைக்கிறேன். இப்போதும், "ஒரு விலை மலிவான டூத்பவுடர் குடுங்க" என்று கேட்கும் அப்பா, பையன் தயவால் டாக்டரிடம் "வெச்சுதா செலவு அதிகம்?" என்று பரிகசிக்கப் படுகிறார். ஆனால் இந்தக் காலத்தில் யார் பல்பொடியை உபயோகிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அந்தச் சுவையை திரும்ப அனுபவிக்க ஆசைப்பட்டு, ஒரு சின்ன டப்பா வாங்கினேன்.  பல்பொடி டப்பாவில் ஆங்கிலத்...

பிச்சை

 'அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்' ரொ ம்ப சிம்பிளான பிச்சைக்காரன் கல்லுளிமங்கன். இந்தப் பெயரை யார், ஏன் வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், வீட்டு வாசலுக்கு வந்தால், ''அம்மா, கல்லுளிமங்கன் வந்திருக்கான்'' என்போம். உப்புச் சத்தியாகிரகப் பாத யாத்திரை போன காந்தியடிகள் மாதிரி மினி பஞ்சகச்சம் கட்டி, கையில் ஒரு கம்புடன் இருப்பான். மேல்சட்டை, துண்டு எதுவும் இருக்காது. கையில் நசுங்கிய அலுமினியத் தட்டு. உடம்பு கறுப்பாக, ஆனால் பளபளப்பாக இருக்கும். கையிலும் கால்களிலும் வெயிலின் சூட்டினால் செதில் செதிலாக இருக்கும். தலை உச்சியில் இட்லி சைஸூக்கு வழுக்கை. ஆறு வெள்ளை முடி இருந்தால் நிச்சயம் நாலு கறுப்பு முடி விகிதம் வேலி போட்ட மாதிரி இருக்கும். எப்போது பார்த்தாலும் இரண்டு மாதம் முன்புதான் மொட்டை அடித்த மாதிரி தோற்றம்.   பழைய சாதம், மோர், நேற்றைய ரசம் என்று எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிற ரகமில்லை. நாலணா கொடுக்க வேண்டும். எப்போதாவது தண்ணீர் கேட்டுச் சாப்பிடுவான். '...

பாச்சை உருண்டை

பாச்சை உருண்டையில் இரண்டு வகை இருக்கிறது. வெங்கட்நாராயணா சிக்னலில் தோளின் குறுக்கே குழந்தையை மாட்டிக்கொண்டு இவற்றை விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அம்மினிக் கொழுக்கட்டை மாதிரி சின்னதாக இருக்கும். பாச்சை உருண்டை என்று கேட்டால் நகரக் கடைக்கார்களுக்குத் தெரியாது. ’நாப்தலின் பால்ஸ்’ என்றால் எடுத்துக்கொடுப்பார்கள். நாப்தலின் என்ற வேதிப்பொருள் இதில் இருப்பதால் இந்தப் பெயர். பூ, பழ வாசனையுடன் நம் வீட்டு பாத்ரூமிலும், பீரோவிலும் இருப்பது இன்னொரு வகை. வாசனைக்குக் காரணம் Paradichlorobenzene என்ற பொருள். முகர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும், ரொம்ப முகர்ந்தால் தலைவலி வரும்.  நாப்தலின் பீரோவில் வைத்தால் கொஞ்ச நாளில் கற்பூரம் போலக் கரைந்து போகும் . திடப் பொருளாக இருக்கும் நாப்தலின் வாயுவாக மாறுகிறது என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். இதிலிருந்து வெளிவரும் விஷ வாயு அல்லது வாசனை கலந்த விஷ வாயுதான் சின்னச் சின்ன ஜீவன்களை சத்தம் போடாமல் சாகடிக்கிறது. நாம் உட்கொண்டால் வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவது போல இருக்கும். வாந்தி வராதவர்களுக்கு பேதி, மூத்திரத்தில் ரத்தம் வரும். போன வாரம் டிவி...

சொர்க்கம், நரகம் - இடைவெளி 250km

பண்டரீபுரம் கர்நாடகத்திற்கும் மஹாராஷ்டிரத்திற்கும் மத்தியில் இருக்கிறது. பத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லியிருக்கிறது. பண்டரீபுரம் பற்றிய புராணக் கதை இப்படிப் போகிறது... புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரை போகவேண்டும் என்ற ஆசையோடு புறப்பட, அவனுடைய வயதான பெற்றோர்களும் மனைவியும் தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துகொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு இடையில் யாத்திரை போய்க்கொண்டிருந்தவர்கள் சந்தரபாகா (பீமா நதி என்றும் அழைப்பர்) நதிக்கரைக்கு வருகிறார்கள். அங்கே காட்டில் உள்ள ஒரு மகரிஷி புண்டரீகனைப் பார்த்து, “உன் தாய் தந்தையரை இந்த வயதான காலத்தில் (யாத்திரைக்கு) கஷ்டப்படுத்துவது தர்மம் ஆகாது. தாய் தந்தையரை நல்லபடியாக வைத்து பூஜித்தாலே சர்வ தீர்த்தயாத்திரைக்குச் சமம்" என்று உபதேசம் செய்தார். புண்டரீகனும் சந்தரபாகா நதிக்கரையிலேயே ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு தாய் தந்தையருக்கு பணிவிடை செய்துகொண்டு காலத்தைக் கழிக்கிறான். புண்டரீகனின் பித்ருபக்தியை நாரதர் மூலமாக அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்ப்பதற்கு வருகிறார். இவர்க...

தொட்டமளூர்

[%image(20090302-brindavanaKrish.jpg|107|143|Brindavana Kannan)%] ஹைவேஸின் அதிவேகப் பயணத்தில் உங்களுக்குப் பின்னால் வரும் காரின் பிரேக் பெடலுக்கு அடியில் வாட்டர் பாட்டில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? போன வருட இறுதியில் வந்த ஒரு சாதாரண சனிக்கிழமை காலை.  டிவியில் ஏதோ அசட்டு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்க, போரடிப்பதை உணர்ந்து திடீர் என்று ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வரலாம் என்று முடிவுசெய்து, தயிர்சாதம், தண்ணீர், குழந்தைகள் என்று எல்லாவற்றையும் அள்ளிகொண்டு கிளம்பும் போதே மணி பதினொன்று. [%image(20090302-DoddamallurGopuram.jpg|133|200|Doddamallur Gopuram)%] ஸ்கூல் எக்ஸ்கர்ஷனில் ஸ்ரீரங்கப்பட்டினத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள்; அதனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. சொல்லப்போவது தொட்டமளூர் பற்றி. பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் சென்னப்பட்டினத்தைத் தாண்டி சில மைல் தொலைவில் இருக்கிறது தொட்டமளூர். ராஜேந்திர சிம்ம சோழ மன்னன் இக்கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. ராமானுஜர் காலம் அல்லது அதற்கு முன்பே இந்தக் கோயில் இருந்திருக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள். கோய...

லிப்டுக்கு இரண்டு கதவு

"White Noise 2 - The Light" என்ற ஆங்கிலப் படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தேன். முதல் காட்சியில், இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு  'சி.சி.யூ'வில் இருதயத் துடிப்பு நின்று போகும். உடனே மருத்துவர்கள் நெஞ்சை அழுத்தி, பிசைந்து இருதயத் துடிப்பை மீட்டுகொண்டு வருவார்கள். 2008, பிப் 27ஆம் தேதி, சுஜாதாவிற்கு இந்த மாதிரியான ஒரு சிகிச்சையை நான் நேரில் பார்க்க நேர்ந்தது. சி.சி.யூ வேறு உலகம். கால்களுக்கு பாலிதீன் உறை அணிந்துகொண்டு, டெட்டால் போன்ற கிருமிநாசினி திரவத்தினால் கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும். 'நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?' போன்ற பார்வைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு எல்லாம் சீராக இருக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருக்க, இரண்டு மூன்று பேர் பக்கத்திலேயே எப்போதும் இருக்கிறார்கள். எல்லா அறைகளுக்கு வெளியிலும் ஒரு மஞ்சள் விளக்கு எரிகிறது. எமர்ஜன்ஸி என்றால் இந்த விளக்கு ஆம்புலன்ஸ் சத்தத்துடன் கண் சிமிட்டுகிறது. உடனே அக்கம்பக்கத்து டாக்டர், நர்சுகளும் உதவிக்கு ஓடி வருகிறார்கள். ...

புத்தகக் காட்சி 2009 ( Book Fair 2009 )

வீடு மாற்ற சரியான தருணம் எது? 1. வீட்டில் பாத்ரூம் சரியில்லை 2. பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை 3. அடுத்த மாதம் புத்தகக் கண்காட்சி விடை - 3. போன வருட இறுதியில் கொஞ்சம் பெரிய வீட்டுக்குப் போனால் நன்றாக இருக்குமே என்று எண்ணி, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் 100 அடி தள்ளி வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். புது வீட்டுக்குப் போவது என்பது கிட்னிக்கு டயாலிசிஸ் மாதிரி. வீட்டில் இருக்கும் குப்பைகள் எல்லாம் ஒழிந்தன. என்றோ காணாமல் போன வஸ்துக்கள் புதையலாகக் கிடைத்தன. “அட நான் ஸ்கூல் படிக்கும் போது உபயோகித்த பேனா, ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்”. சில பொருட்கள் புதையலாக மறைந்து போகும். “என் காது தோடோட திருகை எங்கே போட்டீங்க, எங்க அம்மா கல்யாணத்துக்கு வாங்கித் தந்தது”. ”புது வீட்டுக்கும் எல்லா புத்தகங்களையும் அள்ளிக்கட்டிண்டு வந்தீங்கன்னா..” என்ற சின்ன எச்சரிக்கையே சப்வே ”எதை எடுத்தாலும் பத்து ரூபா” பிளாஸ்டிக் சாமான் விற்கும் வியாபாரி போல ஆக்கியது. எல்லாப் புத்தகங்களயும் பரப்பிப் பார்த்த போது எனக்கே மலைப்பாக இருந்தது. எவ்வளவு புத்தகங்கள் படிக்காமல் ...

திருப்பாவை

நான்கு வருடங்களுக்கு முன்பு மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் திருப்பாவைக்கு (தமிழிலும், ஆங்கிலத்திலும் ) ஒரு படத்துடன் எளிய விளக்கமும் தந்தது நினைவிருக்கலாம். 2007 வருடம் திருப்பாவையில் வரும் உவமைகள் சில வற்றை எழுதினேன். 7 பாடல்களுடன் நின்றுவிட்டது, இந்த வாரம் இரண்டு பாடலுக்காவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன். திருப்பாவை பதிவுகளை முன்பு பார்க்காதவர்கள், வலது பக்கம் உள்ள கிருஷ்ணர் படத்தை கிளிக் செய்து படிக்கலாம். 

சாக்லெட் கடவுள் வந்திருந்தார்

சுஜாதா மறைவிற்குப் பிறகு முதன்முறையாக டிசம்பர் இறுதியில் சென்னை சென்றிருந்தேன். சென்னை பனகல் பார்க், கோடம்பாக்கத்தில் ஸ்கூல் சறுக்கு மரம் போல் மேம்பாலங்கள் முளைத்திருக்கின்றன. போத்தீஸ் பக்கம் பத்து நிமிடம் நின்று பார்த்தபோது, 2 பஸ், 5 ஆட்டோ சில பைக்குகள் போயின. மேம்பாலத்துக்குக் கீழே வழக்கம்போல் அதே கூட்டம். இரண்டு நாடகங்களுக்குப் போக முடிந்தது. கிரேஸி மோகனின்,-"சாக்லேட் கிருஷ்ணா", பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் (பூர்ணம் குருகுலம்)  பூர்ணம், சுஜாதா நினைவாக - "கடவுள் வந்திருந்தார்." [%image(20090102-crazy_mohan.jpg|227|176|null)%] சாக்லெட் கிருஷ்ணாவிற்கு என் மகளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவளுக்கு இது முதல் நாடகம் அனுபவம். போன சமயம் கிரேஸி மோகன் மேக்கப் இல்லாமல் "வாங்க தேசிகன்," என்று வரவேற்று கெஸ்ட் டிக்கேட் கொடுத்து உட்கார வைத்தார். ( கிரேஸி இதை 119 வது தடவை போடுகிறார் ) கதை ரொம்ப சிம்பிள். மாதுவிற்கு பல பிரச்சினைகள் (தங்கை கல்யாணம், பிரமோஷன், அப்பாவிற்கு கச்சேரி சான்ஸ்...). "கிருஷ்ணா ஒரு வழி சொல்லேன்" என்று வேண்ட, கிருஷ்ணா கிரேஸியாக மூக்க...

பெண்களூர்-0 9

"சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடிப்பட்டிருக்கிற‌தாம்" "என்ன ஆயிற்று?" "என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்" [%image(20080729-bangalore_dna.jpg|225|158|null)%] புதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில் இந்த சம்பாஷனை நடைபெற்றது. நான் அந்த சமயம் மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங்கை விட்டுவிட்டு எங்கள் அலுவலகம் பக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன். குமார் அங்கு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கண்ணில் கலவரம் தெரிந்தது. "என்ன ஆச்சு குமார்?" "காரை வெளியிலே எடுக்கும் போது ஸ்கூட்டரில் வேகமாக வந்த இருவர் மோதி கீழே விழுந்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால் அவர்களுக்கு கை, காலில் சின்ன அடி," என்றார். அடிப்பட்டவர்கள் முதலுதவி பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 45 வயசுக்கு மேல் இருக்கும். என்ன காயம...