ஆண்டாளும் தோழிகளும் - அம்பரமே - 17 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா) அரண்மனை வாயில், தோரண காப்போரிடம் அனுமதி பெற்று, மிகுந்த உற்சாகத்துடன் நந்தகோபனுடைய திருமாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கே நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோர் உறங்கும் இடத்திற்கு வருகிறார்கள்.) (காட்சி: நந்தகோபன் முதற்கட்டில் படுத்திருக்கிறார். மெல்ல அவர் தூங்கிக்கொண்டு இருக்கும் இடத்துக்குச் செல்கிறார்கள். அங்கே நந்தகோபன் ஒரு கையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார். மறுகையில் கூர்வேல் இருக்கிறது.) புல்லகலிகா: "மெதுவாக வாருங்கள்! தடுக்கி விழுந்தால் நந்தகோபன். கையில் வேல் வேறு இருக்கிறது, ஜாக்கிரதை!" விசாகா: "தூங்கும்போதும் கையில் எதற்கு வேல்? சுகந்தா: ”கண்ணனின் அழகில் மயங்கிய பெண்கள் அவனைத் திருடிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற பயம் தான்!" புல்லகலிகா: "என்ன? பெண்கள் திருடிக்கொண்டு சென்றுவிடுவார்களா? வேடிக்கை தான்!" பத்மா: "மன்மதனுக்கு மன்மதனான கண்ணனின் பேரனான அநிருத்தனையே பெண் களவாடிக் கொண்டு சென்றது நின...