Skip to main content

Posts

Showing posts from 2012

லைப் ஆப் பை & எஸ்.ராஜம்

சக்கரை வள்ளி கிழங்கு பற்றி முன்பு எழுதியிருந்தேன். சில மாதங்கள் முன் திருச்சியில் வாங்கிய 'பிடி கருணைக் கிழங்கு' இரண்டை எடுத்து பால்கனி தொட்டியில் மண்ணில் புதைத்தேன். சக்கரை வள்ளி கிழங்கு மாதிரி கொடி வளரும் என்று நினைத்தேன் ஆனால் ரொம்ப வித்தியாசமாக ஒரு செடி வளர்ந்தது. அதை விவரிக்க முடியாது அதனால் அதன் படம் இங்கே. கருணைக் கிழங்கு நிறைய விதங்கள் இருக்கிறது. 'பிடி' என்று ஏன் பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பிடி கருணைக் கிழங்கு பற்றி இணையத்தில் தேடினால் கிடைப்பது அதை வைத்து எப்படி மசியல் செய்யலாம் என்பது தான்.

பெருங்காயம் - சிறுகதை

குங்குமத்தில் வந்த சிறுகதை.

அபார்ட்மெண்ட் எண் ஈ505

இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை 'அபார்ட்மெண்ட் எண் ஈ505' ( D என்பது ஈ என்று மாறிவிட்டது )

பீட்சாவும், கலோரியும்..

காரில் ஊர் விட்டு ஊர் போகும் போது வழியெங்கும் ராட்சதக் கற்றாழை செடிகள் வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கற்றாழைச் செடிகளில் பல வகைகள் உள்ளது; சில வருடங்களுக்கு முன்பு சுஹாசினி 'அலோ விரா' பானம் ஒன்றை விளம்பரம் செய்தார். அந்தக் கற்றாழைக்குப் பெயர் சோற்றுக் கற்றாழை. இன்று நாம் பார்க்கும் பல வெளிநாட்டு பொருட்களில் இந்தக் கற்றாழையை உபயோகப்படுத்துகிறார்கள். (கூல் டிரிங்க்ஸ், சோப்பு, ஜெல், ஷாம்பு, எண்ணை). இதன் பயன்கள் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்துவிட்டது. அடுத்து உள்நாட்டு விக்கோ விளம்பரங்களில் மட்டுமே காண்பிக்கப்பட்ட மஞ்சள், வேப்ப இலை போன்றவை தற்போது கார்னியரால் உபயோகப்படுத்தபடுகிறது ஏன் என்று யோசிக்க வேண்டும். திருச்சி உழவர் சந்தையில் பெரிய கற்றாழை ச் செடியை இருபது ரூபாய்க்கு திருஷ்டிக்கு விற்கிறார்கள். நான் ஒன்று வாங்கி வந்து எங்கள் வீட்டு பால்கனியில் தொட்டியில் வளர வைத்தேன். போன வாரம் அதிலிருந்து பூ குருத்து ஒன்று கிளம்பி இப்போது என்னைவிட உசரமாக வளர்ந்துள்ளது. கற்றாழைக்கு அதிகத் தண்ணீர் வேண்டாம். அதற்கு வேண்டிய தண்ணீரை அதன் இலைகளிலேயே சேமித்து வைத்துக்கொள்ளுகிற...

வெளியே இருப்பவர்கள்

இன்று காலை எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் ஜெயமோகன் எழுதியிருக்கும் ' உள்ளே இருப்பவர்கள் ' என்ற பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். படித்தேன். ஒரு முறை சுஜாதாவை அவர் இல்லத்தில் சந்தித்த போது விஷ்ணுபுரம் பற்றி பேச்சு வந்தது. (புத்தகத்தை ஜெயமோகனுக்கு திரும்பி அனுப்பிய சமயம் என்று நினைக்கிறேன்). அவரேதான் ஆரம்பித்தார். ஆனால் அவர் சொன்ன விஷயமும் ஜெயமோகன் குறிப்பிடும் சில விஷயங்களும் மிகுந்த முரண்பாடாக உள்ளன. அதைப் பற்றி நான் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. சுஜாதா என்ன சொன்னார் என்றும் நான் சொல்லப்போவதில்லை. ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு முறை ஸ்ரீராமானுஜர் குருவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாக தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், குரு யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்ற...

மொட்டை கோபுரம்

......எட்டாம் பிரகாரம் ‘அடையவளைந்தான்’ என்று அழைக்கப்படுகிறது. சமிஸ்கிரததில் சர்வெஷ்டானம் என்ற சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் Maze என்று சொல் கிட்டேவருகிறது. இங்கே இருக்கும் நான்கு கோபுரங்களும் முடிவு பெறாமல் இருக்கிறது( தெற்கு கோபுரம் 1987 ஆம் ஆண்டு ராஜ கோபுரம் ஆனது ). பெரியவர்களுக்கு இவை ராய கோபுரம். சின்னவர்களுக்கு இவை ‘மொட்டை கோபுரம்’. சின்ன வயசில் கோயிலுக்கு போகும் போது இந்த தெற்கு வாசல் மொட்டை கோபுரத்தை வியந்து பார்த்துள்ளேன். "எப்படி கட்டியிருக்கிறார்கள் பாருடா!" என்று அப்பா ஒவ்வொரு முறையும் ஸ்ரீரங்கம் போகும் போது காண்பிப்பார். 130 X 100 அடியில் மொட்டையாக இருந்தாலும் கம்பீரமாக இருக்கும். இதில் உள்ள கதவு சட்டம் 43 அடியில் ஒரே கல்லினானது. மேல் கூறையில் இருக்கும் குறுக்கு சட்டம் 23-4-4 அளவில் மேலே எப்படி எடுத்துக்கொண்டு போனார்கள் என்று வியக்கலாம். சின்ன வயசில் இதற்கு மேல் கோபுரம் கட்டியிருந்தால் அது மேகத்தை தொட்டிருக்கும் என்று கற்பனை செய்துள்ளேன். இந்த மொட்டை கோபுரங்கள் நாயக்கர் மன்னர்கள் கடைசியாக கட்ட ஆரம்பித்து பின்பு பிரஞ்சு, பிர...

புலிநகக் கொன்றை

இந்த வாரம் கூடு இதழில் எழுதியது. 

‘லைட்ஸ் ஆப்’ - ரா.கி.ரங்கராஜன்

அஞ்சலி கட்டுரை ( நன்றி: சொல்வனம் )

என்னைக் கவர்ந்த சுஜாதாவின் சிறுகதை

சில வருஷங்களுக்கு முன் ஏதோ ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. முதற்பதிப்பு ஏப்ரல் 1981, விலை ரூ4/=, 80 பக்கங்கள்! வலைப்பதிவு, டிவிட்டர், ஃபேஸ் புக் என்று வந்த பிறகு இந்த மாதிரி புத்தகங்கள் பிரசுரித்தால் வாங்க ஆள் இருப்பார்களா என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் சுமார் பத்து நல்ல விமர்சனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை.

அத்திப் பழமும் ஆதாம் ஏவாளும்

வீட்டுப்பக்கம் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. நடைப்பயிற்சியின் போது அதிலிருந்து விழும் பழங்களை எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளே கருப்பாக சின்ன பூச்சிகள் இருக்கும். பறித்து உடைத்தாலும் இருக்கும். அத்திப்பழம் பற்றி இந்த வருடம் ஆரம்பத்தில் படித்த போது விடை கிடைத்தது. 'அத்தி பூத்தாற்போல்' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம். என் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் அத்தி மரத்தில் எப்போதும் காய்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். சென்னை தி.நகர் பாலாஜி பவன் பின் புறம் இதே போல ஒரு அத்தி மரத்தைப் பார்த்திருக்கிறேன். முன்பு நாட்டு மருந்துக்கடையில் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருந்த அத்திப்பழம் இப்போது எல்லா கடைகளிலும் ஆஞ்சநேயர் வடைமாலை மாதிரி பதப்படுத்தப்பட்ட 'அஞ்சீர்' என்று கிடைக்கிறது (அஞ்சீர் என்றால் 'தேன் அத்தி' என்று பொருள்.). எழுநூறுக்கும் மேற்பட்ட அத்தி மரங்கள் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. அத்திப் பூ என்பது நூற்றுக்கணக்கான பூக்கள் அடங்கிய பூங்கொத்து, இதழ்கள் மூடப்பட்...

கையெழுத்தே தலைஎழுத்து

கோடை விடுமுறையில் தமிழ் ஆசிரியர் எங்களில் சிலரை கூப்பிட்டு ஊமத்தங்காயை எடுத்து வரச் சொல்லி, கரியோடு அதை அரைத்து கரும் பலகையில் தேய்த்து புதுசாக பாலிஷ் போடச் சொல்லுவார். வீட்டுக்கு பக்கத்தில் முளைத்திருக்கும் இந்த செடியை 'விஷச் செடி' என்று பாட்டி எச்சரித்திருக்கிறாள். இதன் காய் முள்ளம்பன்றி போல இருப்பதால் ஆங்கிலத்தில் இதன் பெயர் Thorn apple. பூர்வீகம் கிழக்கு இந்தியா என்கிறார்கள். சிலர் அமெரிக்கா என்கிறார்கள். உன்மத்தம் என்றால் வடமொழியில் சித்தபிரமை என்று அர்த்தம் அதுவே நாளடைவில் ஊமத்தம் என்றாகியிருக்கிறது. பழைய காலத்தில் 'நான் கடவுள்' மாதிரி ஆட்கள் இதை உட்கொண்டு 'ஒரு மாதிரி' இருந்தார்கள் என்று தெரிகிறது. Johann jakob von tschudi தன் பயணக் குறிப்பில் இந்தியாவில் ஒருவர் இதை உட்கொண்டதை இவ்வாறு எழுதியிருக்கார். ...

சுஜாதாவின் நேர்காணல்கள்

சுஜாதா நேர்காணல்கள் என்ற புத்தகத்தை கொண்டுவர வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆவல். சுஜாதாவின் இரண்டு நேர்காணல்கள் மிக முக்கியமானது. ஒன்று "சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் என்னை ஏற்றுக்கொள்ளாததைப் புரிந்துக்கொள்ள முடிகிறது" என்று தீராநதியிலும், இன்னொன்று படிகளில் வந்தது. இதை தவிர அவருடைய நேர்காணல்கள் பல பத்திரிக்கையில் வந்திருக்கிறது. சுட்டி விகடனில் கூட வந்திருக்கிறது. 1996-97ல் தமிழ் டாட் நெட் என்ற இணைய குழுமம் பாலா தலமையில் சுறுசுறுப்பாக இயங்கியது. இன்றும் அதில் இருந்த பலர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். 1997 மார்ச் மாதம் குழுமம் சார்பாக சுஜாதாவின் பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். குழுமத்தில் பலர் கேள்வி கேட்பார்கள், அதை நான் தொகுத்து சுஜாதாவிடம் பதில் பெற வேண்டும். அவ்வளவு தான். சுஜாதாவுடன் எனக்கு அப்போது பரிட்சயம் ஏற்பட்ட புதுசு. அவரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும், கேட்டுவிடலாம் என்று கேட்டேன். உடனே சரி என்று ஒப்புக்கொண்டு விட்டார். யுனிக்கோட் எழுத்துரு இல்லாத காலம். அதனால் தமிழில் மெயில் அனுப்பிவிட்டு "சார் எழுத்தெல்லாம் தெரிகிறதா?" என்று ...

நம் செயல்களுக்குப் பொறுப்பு யார்? - எஸ்.ராஜகோபாலன்.

சுஜாதாவின் தம்பி திரு.எஸ்.ராஜகோபால் சுஜாதா பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறார். சென்னையில் சென்ற டிசம்பர் 6-ஆம் தேதி, ராகேஷ் (32) என்னும் மாணவரை வர்கீஸ் (26) என்னும் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, "கடவுள்தான் என்னைக் கொலை செய்யச் சொன்னார்; ஏன் என்று கடவுளிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று போலீஸிடம் கூறினார் (தினமலர் 7-12-2011) நாம் எல்லோரும் இப்படிச் சொல்பவரை மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லுவிடுவோம். ஆனால் அடிப்படைக் கேள்வியான, 'நாம் செய்யும் காரியங்களுக்கு நாமே பொறுப்பா அல்லது எல்லோரையும் இயக்கும் கடவுள் பொறுப்பா?' என்னும் தத்துவ ஞானக் கேள்விக்கு விடை காண்பதில் சிக்கல் உள்ளது. என் அண்ணன் ரங்கராஜனும் (சுஜாதா) நானும் ஆறு வருடங்களுக்கு முன் பிரம்ம சூத்திரங்களை எளிமையான தமிழில் மொழிபெயர்க்கும்போது இதுபற்றித் தீவிரமாக சிந்தித்தோம்; படித்தோம். பிரம்ம சூத்திரம் (2.1.34) 'பாரபட்சமும் கருணையின்மையும் பிரம்மத்திற்கு இல்லை, நம் முதல் முயற்சியை எதிர்பார்த்து இருப்பதால்' என்று கூறும்- 'வைஷம்யே நைர்குண்யே ந, ஸா பேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி' எ...

சுஜாதாவிற்கு வந்த ஃபோன் கால்

13.4.2007 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து) "....There will be a turning point ... கண்ட்ரோலராக இருந்த போது எனக்கு பல்ராம் என்ற ஒருவர் 'ஏம்பா இங்கே உட்கார்ந்து மன்றாடிக்கொண்டு இருக்கே.. இந்த இன்ஞ்னியரிங் சர்விஸ் எக்ஸாம் வந்திருக்கு. அதை ஏன் நீ எழுத கூடாது.. இன்று கூட அந்த விளம்பரம் வந்திருக்கு பார்த்தியா? என்றார். நான் ஹிந்துவில் ஸ்போர்ட்ஸ் தவிர வேற ஒன்றும் பார்க்கறதில்லை என்றேன். விளம்பரம் வந்திருக்கு கடைசி தேதி இன்று தான் என்று நினைக்கிறேன்... நீ இன்ஞ்சினியரிங் படிச்சிருக்கே எதுக்கு டிராஃபிக் கண்டரோல் பண்ணிக்கொண்டு இருக்கே என்றார். I was sort of drifting around.. not doing much.. and the job was a little boring... this was just before marriage. it was a casual phone call. அதற்கு அப்பறம் UPSC விளம்பரம் வாங்கிக்கொண்டு இன்ஞ்சினியரிங் சர்விஸிஸ் தேர்வுக்கு அப்ளை செய்தேன். ஆகஸ்ட் 1960 என்று நினைக்கிறேன். அது தான் முதல் எலக்டரானிக்ஸில் இன்ஞ்சியரிங் சர்வீஸ் எக்ஸாம் அதற்கு முன்னாடி இன்ஞ்னியரிங் சர்வீஸ் எக்ஸாம் General தான்...

நம்பி இருந்த வீடு

பயணம் முடிந்து, நினைவுகள் வாடாமல் இருக்கும்போதே அதைப் பற்றி எழுதிவிடுவது நல்லது. சில சமயம் முடிவதில்லை. சமீபத்தில் எதையோ தேடும் போது, 2009 டிசம்பர் 27 காலை சுமார் 10 மணிக்குமேல் நான் திருக்கோட்டியூர் சென்றதற்கு அத்தாட்சியாக நான்கு ரூபாய் திருப்பத்தூர் பேருந்து சீட்டு கிடைத்தது.  திருக்கோட்டியூர் பயணத்தை அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.