Skip to main content

சுஜாதாவிற்கு வந்த ஃபோன் கால்

13.4.2007 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து)

"....There will be a turning point ... கண்ட்ரோலராக இருந்த போது எனக்கு பல்ராம் என்ற ஒருவர் 'ஏம்பா இங்கே உட்கார்ந்து மன்றாடிக்கொண்டு இருக்கே.. இந்த இன்ஞ்னியரிங் சர்விஸ் எக்ஸாம் வந்திருக்கு. அதை ஏன் நீ எழுத கூடாது.. இன்று கூட அந்த விளம்பரம் வந்திருக்கு பார்த்தியா? என்றார். நான் ஹிந்துவில் ஸ்போர்ட்ஸ் தவிர வேற ஒன்றும் பார்க்கறதில்லை என்றேன். விளம்பரம் வந்திருக்கு கடைசி தேதி இன்று தான் என்று நினைக்கிறேன்... நீ இன்ஞ்சினியரிங் படிச்சிருக்கே எதுக்கு டிராஃபிக் கண்டரோல் பண்ணிக்கொண்டு இருக்கே என்றார்.

I was sort of drifting around.. not doing much.. and the job was a little boring... this was just before marriage. it was a casual phone call. அதற்கு அப்பறம் UPSC விளம்பரம் வாங்கிக்கொண்டு இன்ஞ்சினியரிங் சர்விஸிஸ் தேர்வுக்கு அப்ளை செய்தேன். ஆகஸ்ட் 1960 என்று நினைக்கிறேன். அது தான் முதல் எலக்டரானிக்ஸில் இன்ஞ்சியரிங் சர்வீஸ் எக்ஸாம் அதற்கு முன்னாடி இன்ஞ்னியரிங் சர்வீஸ் எக்ஸாம் General தான்.

இந்த(எலக்டரானிக்ஸ்) எக்ஸாம் ஆல் இந்தியா ரேடியோ, சிவில் ஏவியேஷன் போன்றவைக்கு விண்ணப்பிக்கலாம். எக்ஸாம் எழுதுவதற்குத் திரும்ப டெக்னிகல் புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். யுனிவர்சிட்டி லைப்பரியில்... பிறகு ஹைதராபாத் டிரான்ஸ்ஃபர் ஆனேன். அங்கே இருக்கும் போது ரிசல்ட் வந்து... ஒரு வருஷம் கழித்து அப்பாயின்மெண்ட் கிடைத்தது - டெக்னிகல் ஆபிஸர் சிவில் ஏவியேஷனில். அங்கே தான் என் Career முழுமையாக மாறிவிட்டது. டெக்னிகல் ஆபிஸராக இருந்ததால் நான் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆனேன். Technology content in my job was much much higher. I had to install navigation equipment. அந்த சமயம்(70'ல்) பாரத் எலக்டரானிக்ஸ் விளம்பரம் வந்தது.. அங்கே போனேன். அங்கேயும் முழுவதும் டெக்னிகல் சமாச்சாரம். Microprocessor... R&D instumention... voting machine.. இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் இவை எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது ஒரு ஃபோன் காலினால்!.

நான் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன். அந்த பல்ராம் என்னை கூப்பிடாமல் இருந்திருந்தால் ... அதுவும் விண்ணபிக்கக் கடைசி நாள் அது... Opportunities in life arrive unwittingly... அதாவது அறிவிக்காமல் வருகிறது.. ஏதோ ஒரு விதத்தில் இதை ஒரு தெய்வாதீனம் என்று கூட சொல்லலாம். வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது தான் உங்களுக்கு இது புரிகிறது. அந்த சமயத்தில் புரியாது. சாதாரண நிகழ்வு போல இருக்கும். . இதைப் பற்றி எழுதியிருக்கேனா என்று தெரியவில்லை...... அதை நீங்களே எழுதிவிடுங்கள்.. Opportunity எப்போது வரும் என்று நமக்கு தெரியாது. எனக்கு மட்டும் இல்லை....நிறைய பேருடைய வாழ்க்கையில் இந்த மாதிரி நடந்திருக்கும்.... உங்க வாழ்க்கையில்... கூட யோசித்து பார்த்தால் ஏதாவது இந்த மாதிரி நடந்திருக்கும்.

போன வருட பதிவு: ஜாகரண்ட பூக்கள்

Comments

  1. குட்

    இரு வரிகளூக்கிடையே போதிய இடைவெளி விடவும்:)

    ReplyDelete
  2. வாத்தியாரின் நினைவுகளை அழகாக வெளிப்படுத்திருக்கிறீர்கள்.. வலை வாய்ப்பு இந்த வருடம் குறைவு... வாத்தியார் வாசிப்பு என்றுமே தொடர்கிறது.. உங்கள் கோட்டோவியங்களுடனான வாத்தியாரின் ஸ்ரீரங்கத்துகதைகள் புத்தகம் சமிபமாக வாங்கினேன். அதில் முன்னுரையில் அழகாக உங்கள் பெயரை குறிப்பிட்டிருந்தார் ( புத்தகங்களிலிருந்து வரிசை படுத்தியவர் திரு தேசிகன்..ஆச்சர்யம் போதவில்லையெனில் மற்றொன்றும் சொல்கிறேன் ..இதில் ஒவியங்களியும் அவர்தான் வரைந்தார் ) செம தேசிகன் சார் வாழ்த்துகள்... அவர் கொடுத்த வாசிப்பு சுகத்திற்கு நன்றியாக மூன்று வருடங்களாக வாத்தியார் நினைவு நாளுக்கு ஒரு பதிவு போட்டு வருகிறேன்...

    ReplyDelete

Post a Comment