1999ல் சுஜாதா ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் என்ற தலைப்பில் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக எழுதினார். அது இன்றும் பலர் படித்து மகிழ்கிறார்கள். புத்தகமாக வரும் போது சில விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுவிடும். [ உதாரணம் : “போனவாரம் ரமேஷ் என்பவர்... ” ] கற்றதும் பெற்றதும் விகடனுக்கு புத்தகமாக எட்டி செய்யும் போது இதை நானே செய்திருக்கிறேன். அதே போல தான் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகமும்... 7ஆம் பகுதி ஆரம்பத்தில் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்ஸனத்தில் ஸ்ரீபுத்தூர் ஸ்வாமிகள் ‘ஸுதர்சனர் பதில்களில்’ ஒரு கேள்வி பதிலை கொடுத்து அதற்கு அவர் பதிலையும் தந்திருந்தார் சுஜாதா. சுஜாதா கூறிய மறுப்பு “இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது இந்த தொடரின் வாசகர்களுக்கு தெரியும். ஒரு வைணவனான நான் வைணவர்களிடம் காணும் முக்கியமான பலவீனங்கள் தம்முடைய உண்மையான நண்பர்களை அறிந்து கொள்ளாததும், சகிப்புத்தன்மை இன்மையும் ( intolerance ). இந்தக் குலம் எண்ணிக்கையில் குறைந்து வருவதற்கும் அடையாளம் இழந்துவருவதற்கும் இவை தான் காரணங்கள். மிகவும் படித்தவரும் என் பெருமதிப்பிற்குரியவருமான, ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களிடம் என...