ஸ்ரீமதழகிய சிங்கருடன் ஒரு நாள் நமக்கு நல்வழி காட்டுபவர்கள், ஞானத்தை அளிப்பவர்களை ஆசாரியர்கள் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் ஆசாரியர் என்னும் சொல் மிக ஆழமான பொருளைக் குறிக்கும். ஆசாரியனுக்கான முதல் தகுதி அரும்பாடுபட்டு அருமறைகளையும், சாஸ்திரங்களையும் கற்று அவற்றின் நுணுக்கங்களில் தெளிவு பெற்று, ‘ஊருக்கு உபதேசம்’ என்று இல்லாமல், தான் அடைந்த ஞானத்தை அனுஷ்டானத்தினால் ஸ்திரப்படுத்தி, . இதைத் தகுதியுடையோருக்கு உபதேசித்து, பலருக்கு ஒளி தரும் கைவிளக்காக இருக்க வேண்டும். .நம்மைப் போன்றவர்களை ‘செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளத் இப்படிப் பட்ட ஆசாரியர்களை பெருமாள் தேர்ந்தெடுக்கிறான். 21.10.91ல் 45ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கராக ஸ்நயாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார். 18 வருடம் பாரத தேசம் முழுவதும் ஸ்ரீமாலோலனுடன் சஞ்சாரம் பல கைங்கரியம், மங்களாசாசனம் செய்தார். பிறகு இந்த உயர்ந்த சம்பிரதாயத் தீபத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிந்தனையுடனே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியபோது அவருக்குத் திருமேனி நோவு சாற்றிக்கொண்டது. ( உடம்பு முடியாமல் போய்விட்டது ) ஒரு நாள் இரவு அவருக்கு ஒரு ஸ்வாமியின் திருநாமம் தோன்றியது....