மேல்கோட்டை, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் கடந்த ஒருவருட காலமாக உற்சவங்கள்,உபன்யாசங்கள், பஜனைகள், கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், புத்தகங்கள், காலண்டர்கள், ஸ்டிகர்கள் சிறிய/பெரிய சிலைகள் என்று எங்கு பார்த்தாலும் ’ஸ்ரீராமானுஜர்-1000’ கொண்டாட்டமாக இருந்துக்கொண்டு இருக்கிறது. ராமானுஜர் சம்பந்தமாக எதையாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எல்லோரிடமும் இருப்பதை காணமுடிந்தது. கோயிலுக்கு முன் போஸ்டர் ஒட்டினார்கள் முடியாதாவர்கள் ’வாட்ஸ் ஆப்’, ஃபேஸ்புக்கில்; தீபாவளி மலர் மாதிரி ராமானுஜர் மலர் கொண்டு வந்தார்கள், தில்லியில் ஸ்டாம்ப் ரிலீஸ்.. எல்லோரும் எதையோ ஆசையுடன் செய்துகொண்டு இருக்கிறார்கள். அடியேனுக்கு ஒரே ஆசை. அவர் அவதரித்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் கால் பதித்து ‘தான் உகந்த’ திருமேனியை தூரத்திலிருந்தாவது சேவித்துவிட்டு வர வேண்டும் என்று. ஸ்ரீபெரும்புதூரில் நண்பர்களிடம் (மே-1) சித்திரை திருவாதிரைக்கு வரலாம் என்று இருக்கிறேன் என்று பேச்சுக்கொடுத்த போது “ஸ்வாமி தயவு செய்து வந்துவிடாதீர்கள்…” “கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கு மேல் கூட்டம் வரப்போகிறது.. நிற்கக் க...