ஆண்டாளின் அமுதம் - 1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்** ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்* நாராயணனே நமக்கே பறை தருவான்!* பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் ஆண்டாளின் சரித்திரத்தை இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம். பாடிக்கொடுத்தாள், சூடிக்கொடுத்தாள். ஆனால் அவளின் திருப்பாவைக்கு உரைகள் எண்ணிலடங்காதவை. ஆண்டாள் சங்கத் தமிழில் மட்டுமே பாடிக்கொடுத்தாள் என்று நினைக்கிறோம். அவள் வடமொழியிலும் நமக்கு அருளியிருக்கிறாள். ஆச்சரியப்பட வேண்டாம். அது தான் ஸ்ரீமத் ராமாயணம். இது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். எப்படி என்று சொல்லுகிறேன். கோதா ஸ்துதியில் ஸ்வாமி தேசிகன் ‘பொறுமையில் இவளே பூமிப்பிராட்டி!’ என்று ஆண்டாளைப் பூமித்தாயின் அவதாரம் என்கிறார். கோதையான பூமித்தாயின் காதான வான்மீகத்திலிருந்து தோன்றியது தான் ஸ்ரீமத் ராமாயணம். காதிலிருந்து தோன்றியதற்கே இந்த ஏற்றம் என்றால் அவளின் திருவாய்...