Skip to main content

அஹோபிலத்தில் கோல் தேடி ஓடி...

அஹோபிலத்தில் கோல் தேடி ஓடி...



ஸ்ரீமத் ஆதிவண் சடகோபனின் சங்கல்பம்’ என்று ஒரு வாரத்துக்கு முன் ஒரு பதிவு எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் முதலாம் அழகிய சிங்கர் பல காலட்சேபங்களை நிகழ்த்திய மண்டபம் குறித்து எழுதியிருந்தேன்.

எழுதும் போது ’என்றாவது நாள்’ மீண்டும் சென்று சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என்றாவது ஒரு நாள்’ என்பதற்குக் காரணம் அஹோபிலம் செல்லத் திருமங்கை ஆழ்வார் போல அஹோபலம் வேண்டும்.

திருப்பதி என்றால் TTD டிக்கெட் ’க்யூ’ நினைவுக்கு வருவது போல, அஹோபிலத்தில் நீரோடைகள், மழைச் சாரலுடன், மலைமேல் ஜ்வாலா நரசிம்மரை சேவிக்க மனதிலும் உடலிலும் குளுக்கோஸ் வேண்டும்.




வெள்ளிக்கிழமை இரவு திடீர் என்று அஹோபிலம் கிளம்பலாம் என்று தோன்றி சனிக்கிழமை காலை புறப்பட்டு, நண்பகல் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கரை சேவித்துவிட்டு, ஆழ்வார் 'கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்’ என்கிறார். அடியேனோ ஐந்து ரூபாய் கோல் தேடி ஓடி அதன் உதவியால் மாலோலனை மெதுவாக நடந்து சென்று சேவித்து, கால்ட்சேப மண்டபத்தை அடைந்து அங்கே பிரதிஷ்டைக்குத் தயாராக இருக்கும் ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவராஹ மூர்த்தியை சேவித்துவிட்டுப் பார்த்த போது அங்கே ஆதிவன் சடகோபன் அவர்களுடன் காட்சி கொடுத்தார்.

குளிர் அருவியில் நனைக்கப்பட்ட ஜலத்துடன் ஜ்வாலனை சேவித்துவிட்டு, உக்ர ஸ்தம்பத்தை அண்ணார்ந்து பார்த்து, கதம்பச் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கல்கண்டு சாதத்தையும் நரசிம்மர் அருள, திரும்பினேன்.

- சுஜாதா தேசிகன்
25.9.2023

Comments

  1. Nice. I have not visited Ahobilam yet. need to visit very soon. Thanks for sharing your experience. Sathish Bengaluru

    ReplyDelete

Post a Comment