Skip to main content

கண்ணன் கதைகள் - 4

 கண்ணன் கதைகள் - 4





யமுனையில் குளிக்க படகில் சென்ற போது பள்ளி சீருடையில் இந்தச் சிறுமி என் கவனத்தை ஈர்த்தாள்.

பத்து ரூபாய்க்கு மீன்களுக்குச் சின்ன சின்ன உருண்டை வங்கிக்கோ என்றாள்.

"தஸ் ரூப்பா"

"வேண்டாம்"

வாங்கிக்கோ என்றாள். அவளின் சிரிப்பில் மயங்கி பத்து ரூபாய் கொடுத்தவுடன் வாய் எல்லாம் பல் - பேச்சுக் கொடுத்தேன்

"என்ன கிளாஸ்?"

"ஃபர்ஸ்ட்"

"ஸ்கூல் யூனிஃபார்ம்"

"சுட்டி, சண்டே"

படகில் இறங்கும் போது ”உன் பேர் என்ன?” என்றேன்

"ராஜகுமாரி"

- சுஜாதா தேசிகன்
ஸ்ரீஜெயந்தி

Comments