கோயிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள் இரண்டு வருடங்களுக்கு பின் இந்த வாரம் சென்னை வாசம். சில நாள் முன் ஸ்ரீ உ.வே மதுரை பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அரங்கராஜன் ஸ்வாமிகளை ஒரு மாலை சந்தித்த போது அவர் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை காலட்சேபம் செய்துகொண்டு இருந்தார். ஒரு மணி நேரம் கேட்டது இனிய அனுபவம். காலட்சேபத்தின் போது ’சாது ராமானுஜசாரியார் ஜீயர்’ பற்றி சொன்ன கருத்துக்கள் மிக அற்புதமானவை. ஜீயர் அவர்கள் கள்ளழகர் கோயிலில் துவாரபாலகர் அருகே திரிதண்டத்தை வைத்துவிட்டுத் தான் பெருமாள் சேவிப்பார் என்றார். சன்யாசம் எல்லாம் பெருமாளிடம் போகும் போது தடையாக இருக்கக் கூடாது என்று நினைப்பாராம். ஜீயர் ஒரு சமயம் கோயிலில் அரங்கராஜன் ஸ்வாமியிடம் “பெருமாள் யாருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார் தெரியுமா ?” என்று கேள்வி கேட்டுவிட்டு “உனக்கும், எனக்கும் இல்லை..ரயில்வே நிலையத்தில் மூட்டை முடுச்சுடன், பெட்டியை தலையில் தூக்கிக்கொண்டு பெருமாளைச் சேவிக்க வரும் பக்தர்களுக்கு காத்துக்கொண்டு இருக்கி...