சொல்லடைவு - வெளியீடு மற்றும் புத்தகத்தை எப்படி பெறுவது. திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு இருக்கிறதா என்று தேடிக்கொண்டும், அறிஞர்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தேன். சங்க இலக்கியத்துக்கும், திருக்குறளுக்கும் இருந்தது ஆனால் ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு இல்லை என்பது தெரிந்த அதே சமயம் ஸ்ரீமந் நாதமுனிகளின் 1201 திருநட்சத்திரப் பத்திரிக்கை அடியேன் இல்லம் தேடி வந்தது. 1200 வருடங்களுக்கு முன் நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து நமக்குப் பெற்றுக் கொடுத்த ஆழ்வார்களின் ஈரச் சொற்களுக்குச் சொல்லடைவு இல்லையே, நினைத்தவுடன் நாம் நாதமுனிகளின் திருநட்சத்திரம் அன்று பிறந்த நாள் பரிசாக அவர் அவதரித்த காட்டுமன்னார் கோயிலில் அவருக்கு இதை சம்பர்பிக்க முடிவு செய்து வேலைகளை ஆரம்பித்தேன். இரண்டு நாளில் மொத்த 300 பக்கங்களையும் டைப் செட் செய்து, பிழைகளை நீக்கி, அட்டைப் படம் முதலியவற்றை வடிவமைத்து அச்சுக்கு அனுப்பியது எல்லாம் ஒளிக்கீற்று போல முடிந்ததற்குக் காரணம் நாதமுனிகளின் ஆசிகள் தான். இதுவரை நேரில் பார்க்காத நண்பர் பிரசன்னா, ஓட்டுனருடன் காரை அனுப்ப திருவாலி திருநகரிக்கு ...