2022 கடைசியில் திருஷ்டி சுற்றிப் போடுதல் போல ’இந்த வருடம் என்ன செய்தேன்’ என்று ஒரு பதிவை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் எழுதுவது மரபு. கொரோனாவிற்குப் பின் பயணம் அதிகரித்து, இந்த வருடம் 194 நகரங்கள், 22K கிமீ பயணம் செய்திருக்கிறேன் என்று கூகிள் செப்பியது. உருப்படியாக செய்த விஷயம் இரண்டரை. 1)பதம் பிரித்த பிரபந்தம் இரண்டாம் பதிப்பு; அதை ஸ்ரீ உ.வே கிருஷ்ண பிரேமி ஸ்வாமி, ஸ்ரீ உ.வே பட்டண்ணா ஸ்வாமி, ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமி, ஸ்ரீ உ.வே வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பல பெரியோர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றது. ஸ்ரீ உ.வே டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் எழுதிக்கொடுத்த பாராட்டுரை மகிழ்ச்சியைக் கொடுத்தது. எண்பது வயத் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்கள் உங்கள் புத்தகத்தை மேலும் செம்மைப் படுத்த வேண்டும் என்று இரண்டு மணி நேரம் தொலைப்பேசியில் புத்தகத்தில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டி தமிழ் வகுப்பு எடுத்தார். அடுத்து, 2) ஸ்ரீராமர் சென்ற பாதையில் யாத்திரை சென்று வந்தது. 0.5)கல்கியில் ’கடைசிப் பக்கம்’ இரண்டு வருடம் தொடர்ந்து எழுதி முடித்தது ( அதைப் படித்...