19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள் உய்யக்கொண்டார் சற்று நேர மௌனத்துக்குப் பின் “மணக்கால் நம்பியே ! அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் கிடைத்தால் நிச்சயம் உம் ஆசை ஈடேறும்” என்றார். இதைக் கேட்ட மணக்கால் நம்பி “நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் சம்பந்தமும், உங்களுக்கு நாதமுனிகளின் சம்பந்தமும், அடியேனுக்குத் தேவரீர் சம்பந்தம் கிடைத்திருக்கிறது! அதனால் அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் நிச்சயம் சித்திக்கும் என்று நம்புகிறேன்!” என்று உய்யக்கொண்டாரின் திருவடியில் விழுந்து வணங்கினார். உய்யக்கொண்டார் ”நாதமுனிகளால் நமக்கு ஆழ்வார்களின் சம்பந்தமும் கிடைத்திருக்கிறது! அவர் திருவரங்கத்தில் நிகழ்த்திய அறியச் செயல்களை கூறுகிறேன்” என்று கூற ஆரம்பிக்கச் சிஷ்யர்கள் ஆர்வமாகக் கேட்க ஆயத்தமானார்கள். நம் நேயர்களையும் உய்யக்கொண்டார் கூறிவதை கேட்க அழைக்கிறோம். ”ஆழ்வார்களில் கடைக் குட்டியானவர் திருமங்கை மன்னன். ஆடல்மா என்ற குதிரையில் சென்று எல்லா திவ்ய தேச பெருமாளையும் மங்களாசாசனம் செய்துவிட்டு, தம்முடைய கடைசிப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தைப் பாடத் தொடங்கினார். அதன் முடிவில் “புனல் அரங்...