’செவிக்கினிய செஞ்சொல்’ என்றால் அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கும். ஆனால் ‘செஞ்சொல்’ என்றால் என்ன என்று கேட்டால் முழிப்போம். இதே போல் தான் ‘செம்மொழி’, ‘செந்தமிழ்’ போன்ற வார்த்தைகளும். செஞ்சொல் என்றால் செம்மையான என்று பொருள். ’செமையா’ இருக்கு என்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் செம்மை இல்லை, செம்மை என்றால் உள்ளதை உள்ளபடி செல்லுவது எதுவோ அது தான் செம்மை. நல்ல சொற்களை செம்மையாக சொன்னால் அதில் ஈரம் இருக்கும். இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். அன்பாக சொல்லும் சொல்லை ஈரம் கலந்தாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். நஞ்சீயர் பல சாஸ்திரங்களை எல்லாம் மேல்கோட்டையில் கற்றபின் ஸ்ரீரங்கம் வந்து பட்டரிடம் ஆழ்வார்களுடைய பாசுரங்களை கற்ற பின் ஆழ்வார்களின் பாசுரங்களில் இன்சொல்லில் ‘ஈரம்’ இருக்கிறது என்பாராம். சென்னை வெய்யிலில் எப்படி ஏ.சி ரூம் சுகமாக இருக்குமோ அது போல ஆழ்வார் பாசுரங்களில் ஈரம் இருக்கும். செஞ்சொல், ஈரம் கலந்த தமிழில் பாடும் போது ஆழ்வார்கள் உருகியது த...