2016 பெரிசாக ஒன்றும் செய்யவில்லை என்பதே பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ’பெரிய’ என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் சொல்ல வேண்டும் என்றால், வருட ஆரம்பத்தில் பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரத்துக்கு பெரிய நம்பிகள் திருமாளிகையில் இருந்தேன். வருடக் கடைசியில் அதே பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரம், அதே திருமாளிகையில் நிறைவாக நிறைவு செய்தேன். சித்திரை மாதம், ஸ்ரீஉடையவர் திருநட்சத்திரத்துக்கு ஒரு நாள் முழுக்க ஸ்ரீபெரும்பூத்தூரில் இருந்தேன். ஸ்ரீராமானுஜர் பக்கம் இருந்த கூட்டம் அதிகமாக இருக்க என்னையும் உள்ளே வைத்து கதவைச் சாத்திவிட்டார்கள். குழந்தையைத் தூக்கி கொஞ்சம் தூரத்தில் உடையவருடன் அடியேன் இருந்தது பெரும் பேறு. காஞ்சிபுரத்திலிருந்து சில மைல் தொலைவில் சாலைக் கிணற்றுக்கு சென்ற போது அதை நிர்வகிப்பவரைக் கண்டு நாம் என்ன பெரிய சாதனைச் சாதித்துவிட்டோம் என்று கூனி குறுகினேன். வருடக் கடைசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவரசுக்கு சென்று சில மணி நேரம் உலாவினேன். மாடுகள் சாலையில் அடிப்பட்டால் அதைக் கருணையுடன் பார்க்காமல், எவ்வளவு கிலோ என்று பார்க்கும் சமூகத்தில் நண்பர் வீரராகவன் போன்ற நல்ல உள்ள...