[%image(20060120-desikan_at_bookfair.jpg|328|246|At the BookFair)%] புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு முறை போனேன். அங்கு வாங்கிய புத்தகங்களள பற்றிச் சொல்ல போவதில்லை பயப்படாதீர்கள். * புத்தகக் கண்காட்சி பின்வாயிலில் ஓர் இளைஞர் நம்முடைய பெயரை அரிசி, கடுகு போன்றவற்றில் எழுதி (ரூ 20/= ) ஒரு சாவிக் கொத்தில் போட்டுத் தருகிறார். இந்த முறை இது புதுசு. அதைக் கடந்து வந்தால் டெல்லி அப்பளம், சூப், ஆவின் கடை, மிளகாய் பஜ்ஜி என்று சுவாரசியமாக இருக்கிறது. முதல்முறை போனபோது இருந்த அருமையான விவேகானந்தா காப்பி (விலை 6/-) இரண்டாவது முறை போன போது இல்லை. * உள்ளே வந்தால் எது நல்ல புத்தகம் (அல்லது எனக்குப் பிடித்த புத்தகம் எது) என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். இந்த முறை ஒன்று கண்டுபிடித்தேன், புத்தகம் 100 பக்கம் என்றால் அதனுடைய விலை ரூ 50/-; 200 பக்கம் என்றால் ரூ100/=. கெட்டியட்டை என்றால் ஒரு ரூ20/= சேர்த்துக் கொள்ளுங்கள். * நக்கீரன் பத்திரிகையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய, 'இந்து மதம் எங்கே போகிறது?' அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியது புத்தக வடிவில் நன்றாகப் போகிறது. "சார், எனக...