நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அன்று தான் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம். குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் ஊரில் மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இது உங்களுக்குத் தெரிந்த தகவல் தான். தாய்மொழியான மலையாளம், தமிழ், வடமொழி என்று மும்மொழிக் கொள்கையை அன்றே கடைப்பிடித்தவர் இந்த ஆழ்வார். அதே கேரளத் தேசத்தைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி அவர்கள் அருளியது தான் நாராயணீயம். சுமார் 18,000 ஸ்லோகங்கள் கொண்ட பாகவதத்தின் சாரமாக, சுமார் 1000 உயர்ந்த வடமொழி ஸ்லோகங்களாகத் தந்துள்ளார். அதை நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தமிழ்ப் பாடல் வடிவில் வடித்திருக்கிறார். ஞாயிறு மாலை இந்தியா கெலித்து விடுமா என்ற கெலியிலும் பலர் நாரத கான சபாவில் அதன் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்தார்கள். வீடியோ காமராவில் பின்னந்தலை தெரியாமல் குனிந்துகொண்டு சென்ற போது, அடியேனை ஸ்ரீநிவாசன் வரவேற்று முன் வரிசையில் அமர வைத்...