Skip to main content

Posts

Showing posts from November, 2023

முனிவாகன போகம்

  முனிவாகன போகம் - திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம் ஸ்வாமி தேசிகன் திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானுக்கு ’முனிவாகன போகம்’ என்ற ஆச்சரியமான உரையை அருளியிருக்கிறார். ‘முனிவாகன போகம்’ என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று யோசிக்கலாம். முதலில் முனிவாகனம் அமலனாதிபிரானுக்கு இரண்டு தனியன்கள் இருக்கிறது பெரியநம்பிகள் அருளிய ‘‘ஆபாதசூட மநுபூய’ என்று தொடங்கும் தனியனில் “முநிவாஹநம்’ என்ற வார்த்தை வருகிறது. லோக சாரங்க மஹாமுநியை வாகனமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை மனசாலே துதிக்க வேண்டும் என்கிறார். அடுத்து திருமலை நம்பிகள் அருளிச்செய்த தனியனில் ‘முனியேறித் தனிபுகுந்து’ என்று இதிலும் லோகஸாரங்க முனிவரைத் தனது வாகனமாகக் கொண்டு என்ற அர்த்தத்தில் வருகிறது. அடுத்த ‘தனிபுகுந்து’ என்ற வார்த்தை மிக முக்கியம். அதிலிருந்து தான் போகம் என்ற வார்த்தை வருகிறது. தனிபுகுந்து - பெரிய பெருமாளுடைய அனுபவம் என்னும் உயர்ந்த ’போகம்’ பெற்றார் ஆழ்வார் என்கிறார்கள் பூர்வாசாரியார்கள். இப்போது ’போகம்’ என்ற வார்த்தையைக் கொஞ்சம் ஆராயலாம். போகம் என்பதற்கு சரியான தமிழ், ஆங்கில வார்த்தை இல்லை. Pleasure, happiness; இன்பம் என்று...

திருமங்கையாழ்வாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் !

திருமங்கையாழ்வாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் ! நம்மாழ்வார் காலத்துக்கு முன் ’ஸ்ரீசடாரி’ என்பதற்கு ’ஸ்ரீசடகோபன்’ என்று பெயர் வந்திருக்க வாய்ப்பு இல்லை. “சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம்” என்று ஸ்ரீசடகோபத்துக்கு ஆதிஷேன் என்று தான் பெயர் இருந்திருக்க வாய்ப்பு. நம்மாழ்வாருக்கு ஸ்ரீசடகோபம் என்ற பெயர் எப்போது, எப்படி வந்தது ? ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரத்தில் வந்தே விஷ்ணுபத ஆஸக்தம் தம்ருஷிம் தாம் ச பாதுகாம் யதார்த்தா சடஜித் ஸம்ஜ்ஞா மத் சித்த விஜயாத் யயோ என்கிறார். சடர்கள் (மூடர்கள்) திருத்தி அரங்கன் பணியில் ஈடுபட்டதால் சடாரி ; சம் என்ற வாயுவை வென்றதால் சடகோபன். பாதுகை, நம்மாழ்வார் இருவருக்கும் சடாரி, சடகோபன் என்ற திருநாமங்கள். பெரியவாச்சான் பிள்ளை அருளிய ‘கலியன் அருள்பாடு’ என்ற பகுதியில் திருவத்யயன உற்சவம் எப்படித் திருமங்கை மன்னனால் ஏற்பட்டது என்று பல விஷயங்களை விவரித்துள்ளார். திருமங்கை ஆழ்வார் நம்பெருமாள் முன் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் சேவித்து போது பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு என்ன வேண்டுமோ கேளும்” என்று சொல்ல உடனே திருமங்கை ஆழ்வார் “த...

கைசிக புராணத்தின் கதை

கைசிக புராணத்தின் கதை திருநெல்வேலிக்கு சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குறுங்குடி என்னும் ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசம். பெருமாள் அழகிய நம்பி. ஊரும் பெருமாளும் அழகு. பசுக்கள் நிறைந்த பொய்கை கரையோரத்தில்... நெடிய பனைமரங்களிலிருந்து விழும் பனம் பழங்களை பொய்கையில் இருக்கும் வாளை மீன்கள் உண்ணுவதற்குத் துள்ளிப்பாய்கின்றன என்கிறார் திருமழிசை ஆழ்வார். நான் போன சமயம்(2017) திருநெல்வேலில் மழை+புயல். நெற்பயிரை முழுகடித்துக்கொண்டும், வாழை மரங்கள் எங்களை சேவித்துக்கொண்டு இருக்க, வெளியே சென்று எங்காவது மாட்டிக்கொண்டால் ’கைசிக நாடகத்தை தவற விட்டிவிட்டு விஜய சொக்கநாதர் போல ஒருவருடம் எல்லாம் என்னால் காத்துக்கொண்டு இருக்க முடியாது அதனால் கோயிலிலேயே நாள் முழுவதும் காத்துக்கொண்டு இருந்தேன். விஜய சொக்கநாதர் குடும்பம் விஜய சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். (ஸ்ரீரங்கத்தில் பச்சைக்கற்பூரத்தை பெருமாள் மீது தூவுவர் . நம்பெருமாள் கற்பூரபடியேற்ற சேவையை என்பார்கள் )மனம் வருந்திய ...

தித்திக்கும் திருப்பாவை - இரண்டாம் பதிப்பு

தித்திக்கும் திருப்பாவை - இரண்டாம் பதிப்பு இந்த ஆண்டு(2023) ஏப்ரல் மாதம் திருப்பாவை ஜீயர் என்று நாம் அன்புடன் போற்றும் ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர நன்னாளில் ‘தித்திக்கும் திருப்பாவை’ புத்தகத்தை வெளியிட்டோம். புத்தகம் வெளியிட்டு சில மாதங்களில் கோதை நாச்சியார் மீது உள்ள அன்பினால் எல்லாப் புத்தகமும் தீர்ந்துவிட்டது.  இந்தக் கார்த்திகையில் கார்த்திகை நாளான நம் ஸ்ரீதிருமங்கையாழ்வார் திருநட்சத்திரம் அன்று இரண்டாம் பதிப்பு அச்சுக்குச் செல்லுகிறது. மார்கழி மாதத்துக்குள் உங்கள் கைகளுக்கு வந்து சேர ஆண்டாளை துணைக்கு அழைத்திருக்கிறேன். ஸ்ரீராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை இந்த முறை இப்புத்தகத்தைச் கிராமத்துச் சிறுவர்களுக்குப் பரிசாகக் கொடுக்க எண்ணியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  அடியார்கள் முன்பு போல ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன். புத்தகத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தபால் செலவுடன் அதே ரூ100/- (நூறு ரூபாய்) தான்.  புத்தகம் பெற விரும்புகிறவர்கள்.  உங்கள் பெயர்/Name: முழு முகவரி/Address: தொலைப்பேசி எண்/Phone number: தேவையான பிரதிகள்/Required copies:...