Skip to main content

Posts

Showing posts from March, 2023

வெள்ளகோவில் வரதராஜர் முன் விழுந்த தேங்காய்!

 வெள்ளகோவில் வரதராஜர் முன் விழுந்த தேங்காய்! சென்ற வருடம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திரு ஆறுமுகம் என்பவர் பதம் பிரபந்தப் புத்தகம் ஒன்று வேண்டும் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். விவரங்களை அனுப்பினேன். புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு அடியேனிடம் தொலைப்பேசினார். அவர் திருப்பூரில் வெள்ளகோவில் என்ற இடத்தில் மருத்துவர்; வயது எழுபத்து ஐந்து, அவர் கூறிய விஷயத்துக்கு முன் திருக்கண்ணமங்கை ஆண்டான் குறித்து ஒரு விஷயத்தைப் பார்த்துவிடலாம். திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஆசாரியர், தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அவர் எம்பெருமானுக்குக் கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார். நம்மாழ்வார் திருவாய்மொழி ( 9.2.1 ) ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலைச் சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. நம்மாழ்வார் பாவம் தொலையக் கைங்கரியம் செய் என்கிறாரே என்று நமக்குச் சந்தேகம் வரும். நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தில் இந்த பாசுரத்துக்கு திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி ஒரு சுவையான குறிப்பைத் தருகிறார். ஒரு மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளைப் ...

குலசேகர ஆழ்வார் ‘எடுத்த இசை

குலசேகர ஆழ்வார் ‘எடுத்த இசை நம்பெருமாள், ஸ்ரீராமருடன்... மாசிப் புனர்பூசம் - குலசேகர ஆழ்வார் ( கிளியும் வில்லுடன் சேவை ). திருவடியில் உடையவர், ஆழ்வான்.   பொன்புரையும் வேல் குலசேகரனே மாசிப் புனர்பூசத்து எழில்வஞ்சிக் களத்தில் தோன்றி அன்புடனே நம்பெருமாள் செம்பொற் கோயில் அனைத்து உலகின் பெரு வாழ்வும் அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவும் காண மண்மேல் இருளிரிய வென்றெடுத்த இசையில் சொன்ன நன்பொருள்சேர் திருமொழி நூற்றைந்து பாட்டும் நன்றாக எனக்கருள் செய் நல்கி நீயே பிரபந்த சாரத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ’எங்கள்’ குலசேகர ஆழ்வாரை பற்றி அருளியது. தேசிகனின் சில வார்த்தைகளைக் கொண்டு இந்த கட்டுரையை ஆரம்பிக்கலாம். (வார்த்தைகளை தடித்து காண்பித்திருக்கிறேன் ) பூதத்தாழ்வார் வாழி திருநாமத்தில் ‘ பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே!’ என்று ஒரு வாக்கியம் வருகிறது. பொன்புரையும் என்ற வார்த்தை திருவரங்கத்துக்கு அழகு சேர்க்கிறது அதே வார்த்தை குலசேகர ஆழ்வாருக்கும் இங்கு அழகு சேர்க்க வருகிறது. ஸ்ரீரங்கத்தையும் குலசேகர ஆழ்வாரையும் பிரிக்க முடியுமா ? அன்புடனே நம்பெருமாள் : நம்பெருமாள் ...

ஆசாரியன் செய்யும் உபகாரம்

 ஆசாரியன் செய்யும் உபகாரம் மணக்கால் நம்பி லால்குடி அருகில் மணக்கால் என்ற ஊரில் அவதரித்தார். இன்றும் அந்த ஊர் மணக்கால் நம்பி பெயரைக் கொண்டே விளங்குகிறது. அதற்கு முன் அவ்வூருக்கு என்ன பெயர் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஊரை அடியேன் எப்படிக் கண்டுபிடித்தேன் என்று சொல்லுகிறேன். சில வருடங்களுக்கு முன் காரில் சென்று கொண்டு இருந்த போது ராட்சச மணல் லாரிகள் ‘சைடு’ கொடுக்காமல் ஓரம்கட்டிய போது மணக்கால் என்ற ஊர் பலகை வர “இங்கே தான் ஆளவந்தாருக்கு ஆசாரியரான மணக்கால் நம்பிகள் பிறந்த இடம்” என்று பெயர்ப் பலகையை கை கூப்பிச் சேவித்துவிட்டு ஒரு கிமீ தூரம் செண்டிருப்பேன் “மணக்கால் நம்பி அவதார ஸ்தலம்” என்ற சின்ன பலகை கண்ணில் பட்டவுடன் வண்டியைத் திருப்பிச் சென்ற போது கோயில் கதவு பூட்டியிருந்தது. கதவு திறப்பதற்குள் நம்பியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். உய்யக்கொண்டாரின் பிரதானச் சீடர் மணற்கால் நம்பி இயற்பெயர் “ஸ்ரீராமன்”. உய்யக்கொண்டாரின் மனைவி பரமபதிக்க, அவருடைய திருமாளிகை காரியமெல்லாம் மணக்கால் நம்பியே செய்துவந்தார். உய்யக்கொண்டாரின் இரண்டு சின்ன பெண் குழந்தைகளையும் இவரே பார்த்துக்கொ...

சாளக்கிராமம் அடை நெஞ்சே!

  எல்லா திவ்ய தேசத்துக்கும் ஸ்தல புராணம் என்று ஒரு கதை இருக்கும். ‘ சாளக்கிராமம் ’ என்ற ‘ முக்திநாத் ’ திவ்ய தேசத்துக்கு நீங்கள் போய்விட்டு வந்து சொல்லும் கதையே ஒரு புராணம். முக்திநாத் சென்று வந்த என்னுடைய அக்கதையே இக்கட்டுரை. 108 திவ்ய தேசங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாள் உகந்து வாசம் செய்யும் ஸ்தலங்களில் 106 மட்டுமே நாம் இந்தப் பிறவியில் சேவிக்க முடியும். ’போதுமடா சாமி!’ என்று இந்தப் பூவுலகத்தை விட்டுக் கிளம்பிய பின் மற்ற இரண்டு திவ்ய தேசங்களைக் காண முடியும் அவை திருப்பாற்கடல் மற்றும் ஸ்ரீவைகுண்டம். இந்த 106ரிலும் இரண்டு திவ்ய தேசம் பெருமாள் மனது வைத்து ‘சரி வந்துட்டு போ’ என்று கூப்பிட்டால் மட்டுமே சேவிக்க முடியும். அவை பத்ரி மற்றும் சாளக்கிராமம். திருமங்கை ஆழ்வார் ’ வதரி வணங்குதுமே ’ என்று பத்ரிகாசிரம பெருமாளைப் பாடிவிட்டு அடுத்து ’ சாளக்கிராமம் அடை நெஞ்சே ’ என்று முக்திநாத் பெருமாளை நோக்கித் தன் குதிரையுடன் புறப்படுகிறார். போகும் வழியில் காடுகளைக் கடக்கும்போது அவருக்கு ராமர் காடுகளை நடந்து கடந்து சென்றது நினைவுக்கு வந்திருக்க வேண்டும். பெரிய திருமொழியில் சாளக்கிரமம் பற்ற...