ஆடு அழைப்பார் இல்லை ஸ்ரீராமரிடம் தோல்வியுற்ற அரக்கர்களுடைய பாவனையில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் பாசுரங்களைப் பாடியுள்ளார். அதில் ஒரு பாசுரம் இது... இரக்கம் இன்றி எம்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் பட்டனன்;* இனி யாவர்க்கு உரைக்கோம்?** குரக்கு-நாயகர்காள்! இளங்கோவே!* கோல வல் வில் இராமபிரானே!* அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை;* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ குரங்கு தலைவர்களே! இளையபெருமாளே அழகிய வில் ஏந்திய ராமபிரானே, இராவணன் செய்த தீமையினால் அதன் பலனை நாங்கள் இப்பிறவியிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். விரிவாகச் சொல்ல ஒன்றும் இல்லை. இனிமேல் 'அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை' என்கிறார்கள். இதில் ’அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை’ என்பதற்குப் பட்டர் 'அரக்கர்களில் இனி ஆடு போலக் கூப்பிட வல்லவர் யாருமில்லை’ என்று ஒரு விளக்கம் கொடுத்தார். இதற்கு ஒரு குட்டிக் கதை இருக்கிறது. ஒரு நொண்டி ஆட்டுக்கு முன் ஒரு சிங்கம் வந்து நின்றது. உள்ளே பயம் இருந்தாலும், ஓட முடியாத காரணத்தால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் ...