Skip to main content

Posts

Showing posts from February, 2006

பலே பல்வந்த்பூரா

[%image(20060226-Peoplesrailway.jpg|160|160|People's railway station)%] ரயில்வே பட்ஜட்டில் ரயில் டிக்கேட் எவ்வளவு கம்மியாகியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்த போது, NDTVல் பல்வந்த்பூரா ஸ்டேஷனை பற்றி ஒரு கொசுரு செய்தியை கான்பித்தார்கள். பல்வந்த்பூரா(Balwantpura) ஜெய்பூரிலிருந்து நூற்றியருபது கி.மீ தூரத்தில் இருக்கிறது.  இந்திய வரைபடத்தில் இந்த மாதிரி ஓர் ஊர் இருக்கா என்று கூட தெரியாது. இந்த 1994 ஆம் ஆண்டு முதலே பல்வந்த்புராவில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் விரும்பி, ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் போதிய அளவு நிதியில்லை என்று ரயில்வே நிராகரித்தது. இதனால் சுற்றி உள்ள ஐந்து கிராமங்களில் இருப்பவர்கள் பஞ்சாயத்தில் ஒன்று கூடி தாங்களாகவே ஸ்டேஷன் கட்ட முடிவு செய்தனர். அவர்கள் ரயில்வேயிடம் "நாங்கள் ஸ்டேஷன் கட்டினால் நீங்கள் அட்லீஸ்ட் இந்த வழியாக வரும் ரயிலை நிறுத்துவீர்களா என்றனர்?" ரயில்வே சம்மதிக்கவே 20,000 மக்கள் கொண்ட ஊர் மக்கள், பக்கத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்று நன்கொடை வசூலித்து தாங்களாகவே ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள்.  அங்கு...

IVA

[%image(20060225-iva_kid.jpg|240|180|IVA photo1)%] நம்மில் பலர் சமூக சேவை என்றால் அமெரிக்காவில் இருந்து $100 அல்லது உள்ளூர் ரூ1000/= கொடுத்து ரசீது வாங்கி வருமான வரி குறைப்புக்கு(80G) உபயோகப்படுத்துவது; CRY கார்ட் வாங்குவது; அலுவலகத்தில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் உபயோகபடுத்திய துணிமணிகளை போடுவது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நானும் சமூக சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொள்ளாலாம் அவ்வளவுதான். வயலில் இறங்கி வேலை செய்தால்தான் விவசாயின் கஷ்டம் தெரியும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அதேபோல் தான் இதுவும். களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் அது எவ்வளவு கஷ்டமான ஆனந்தமான செயல் என்று தெரியும். IVA பற்றி இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன். IVA என்பது "Individuals for Voluntary Activities" என்பதின் சுருக்கம். முதலில் Infosysல் வேலை செய்யும் சிலரால் 2003ல் ஆரம்பிக்கபட்டது. பிறகு மற்ற நிறுவனங்களின் மென்பொருளார்கள் இதில் சேர்ந்து இன்று 700க்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்!. முதலில் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தர ஆரம்பித்த இவர்கள் பிறகு கண்தெரி...

முழு வீச்சில் வேதாளம்

விக்கிரமாதித்தன் பத்தாவது மாடியில் ஒரு புது ஃபிளாட் வாங்கியிருந்தான். பால்கனியில் பக்கோடா, டீ சாப்பிட்டுக்கொண்டு குமுதம் நடுப்பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தான், பார்த்துக்கொண்டிருந்தான் என்பது தான் சரியான வார்த்தை பிரயோகமாக இருக்கும். வேதாளம் எட்டிப் பார்த்தது. "ஐயோ! இங்கேயும் வந்துட்டையா?" என்று அதிர்ச்சியில் விக்கிரமாதித்தன் கத்தினான்.   "புது வீடு நன்றாகத் தான் இருக்கிறது!" "இருக்காதா பின்ன, எல்லாம் மார்பிள், கிரானைட்" "தமிழில் பேசு, மார்பிள் - சலவைக் கல், கிரானைட் - கருங்கல்" "ஐயோ!" "உனக்குத் தெரியுமா ? இந்த மார்பிள், கிரானைட்டில் கதிர் வீச்சு இருக்கிறது!" "ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை" என்று விக்கிரமாதித்தன் கடுப்பானான். வேதாளம் வழக்கம் போல் தொடந்தது... "மார்பிள் ( சலவைக் கல் ), கிரானைட் ( கருங்கல் ) ஆகியவற்றில் கொஞ்சம் கதிரியக்கமுள்ள மூலப் பொருட்கள் (Radioactive elements) வெவ்வேறு விகிதத்தில் இருக்கின்றன.  "யுரேனியம்(uranium), தோரியம்(Thorium) இவற்றில் தான் இருக்குன்னு நினைச்சேன்" ...

ஐந்து புத்தகங்கள்

வாரயிறுதியில் சென்னை செல்லும் போது 'நியூ புக் லெண்டஸ்'   செல்வது வழக்கம். அங்கு நண்பர் ஸ்ரீநிவாசனிடம்  'எந்த புத்தகம் நன்றாக போகிறது?' என்று விசாரிப்பேன். சென்ற வாரம் விசாரித்ததில் முதல் ஐந்து புத்தகங்கள் என்று அவர் சொன்னதை வலது பக்கம் தந்துள்ளேன். மாதம் ஒரு முறை புதுபிக்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம். தகவல் சொன்ன ஸ்ரீநிவாசனுக்கு நன்றி

அறிவிப்பு

www.desikan.com   தளம் இயங்கும வழங்கி (சர்வர்) சில தடங்கல்களை நேற்று சந்திக்க நேர்ந்தது. இதனால் நேர்மை என்ற பதிவை பலர் படிக்கமுடியாமல் போய்விட்டது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தடங்கலுக்கு மன்னிக்கவும். என்னை தனி அஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. நேர்மை என்ற பதிவை தொடர்ந்து படிக்க இங்கு சுட்டியை கிளிக் செய்யவும் .  

நேர்மை

சமிபத்தில் படித்த நல்ல பதிவு நண்பர் பிரதீப் எழுதியது .தலைப்பு நேர்மை. இதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்ததா என்று தெரியவில்லை. இதை இங்கு பிரசுரிக்கிறேன். அனுமதி தந்த பிரதீபுக்கு நன்றி. இப்போது கூட லேட் இல்லை நாம் மாறலாம். Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். ...

பெண்களூர்-0 6

நேற்று தான் பெங்களூர் வந்தது போல் இருக்கிறது, அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி வாரயிறுதி ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கிறேன்.  போன ஜென்மத்தில் ரயில்வேக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இரண்டு வீடு மாத்த வேண்டியிருந்தது. தற்போது புதிதாக குடிபெயர்ந்த வீட்டின் பால்கனியில் வாழைப்பழம் சாப்பிட்டால் ஆபத்து. காரணம் கடைசியில். பெங்களூரில் வீடு தேடுவது அவ்வளவு சுலபம் இல்லை. வீடு தேடும் போது முதல் முதலில் இவரைதான் சந்தித்தேன். "சார், உங்கள் வீடு காலி என கேள்விப்பட்டேன் .." "ஆமாம், நீங்கள் எவ்வளவு பேர்?" "நான், என் மனைவி, குழந்தை, வீட்டை பார்க்கலாமா ?" "அப்படியா? வாடகை 14,000/= அதைத்தவிர மெயிண்டெனஸ், EB...எல்லாம் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" "சார் விட்டை பார்க்கலாமா..." "ஆணி அடிக்க கூடாது, நாய் வளர்க்க கூடாது..." "சார் வீட்டை பார்க்கலாமா..." "பால்கனியில் பூத்தொட்டி வைக்கக் கூடாது" "அப்புறம் கடைசியா...

சுடு தேங்காய்

தேங்காயை பார்த்தால் எனக்கு 'சுடு தேங்காய்' ஞாபகம் தான் வரும். சின்ன வயசில் என் தாத்தா (தற்போது அவருக்கு வயது 96)  வீட்டுக்கு போன போது, இதை எனக்கு எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தார். அதை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன். தேவையான பொருட்கள்: 1. குடுமியுடன் ஒரு நல்ல முற்றிய தேங்காய். 2. பொட்டுக்கடலை( உடைத்த கடலை ) - ஒரு பிடி 3. வெல்லம் - - ஒரு பிடி 4. கற்கண்டு - அரை பிடி 5. அவல் - ஒரு பிடி 6. முந்திரி பருப்பு - அரை பிடி 7. ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன் 8. நெருப்பு பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி. செய்முறை: முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். அதை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள்.  மேற் சொன்ன தேவையான பொருட்கள் ( கடைசி இரண்டைத் தவிர ) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின...