வரலாற்றுப் பாடம் இன்றும் பள்ளிகளில் கொஞ்சம் போரான பாடம் தான். அதற்கு காரணம், நம் பள்ளிகளில் அதை நடத்தும் விதம். (சில பள்ளிகள் இதற்கு விதிவிலக்கு). இன்று பள்ளிகளில் வரலாற்று பாடம் இந்த கட்டுரை மாதிரி இருந்தால் நிச்சியம் மாணவர்கள் விரும்பி படிப்பார்கள். முதல் முயற்சியாக சோழர் ( குறிப்பாக ராஜராஜ சோழன் ) பற்றி இந்த கட்டுரை. (கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இருக்கும்.) தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் " சோழ " என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. உலக்கை - ஒலக்கையாக மாறலாம் என்றால் 'சூழ' - 'சோழ' வாக மாறியதில் வியப்பில்லை. தமிழ் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்று இப்போது தெரிந்திருக்கும். சமிஸ்கிரதித்தில் 'திருடன்' என்றும் சொல்லுவதுண்டு. சோழர்க்குறிய பெயர்களில் 'கிள்ளி வளவன்' பிரபலமானது. ஆராய்ந்தால் "கிள், தோண்டு, வெட்டு" என்னும் பல பொருள்களைக் குறித்து "நிலத்தை தோண்டி வளம் செய்பவன்" என்பது கிள்ளி வளவன் என்று வந்திருக்கலாம்....