பெரிய நம்பியின் திருவாக்கு ஆசாரியன் திருவாக்கிற்கு என்றும் ஓர் ஏற்றம் உண்டு. 1000 வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்க்கையே மாற்றிவிடும். ஏன் என்றால் அந்த வார்த்தை சத்தியம். இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள். மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. ’தந்தை பெரியார்’ மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார். 1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துகொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்). உபன்யாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். “தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலைப் பல ஸ்ரீ வைஷ்ணவர்களை முகம் சுளிக்கச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் “இது தகுமோ?” என்று கேட்க அதற்கு நம்பிகள் “பறவையான ஜடாயுவுக்கு ராமர் இற...