Skip to main content

Posts

Showing posts from May, 2023

கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை கோயில் என்றால் அது திருவரங்கம் தான். இன்றும் நாராயணா என்று சொல்லுவதைக் காட்டிலும், திருவரங்கம் என்றால் மனதில் ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது. அடுக்குமாடிக்குடியிருப்பு வாங்கும் போது சின்ன அளவில் ’மினியேச்சர் மாடல்’ ஒன்று வைத்திருப்பார்கள். குட்டியாக பார்க்க அழகாக இருக்கும். திருவரங்கம் வைகுண்டத்தின் மினியேச்சர் மாதிரி. அதனால் தான் பூலோக வைகுண்டம் என்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்யச்* செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்* மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா* கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே. அதாவது ஸ்ரீராமருக்கு ஏற்ற இடம் திருவரங்கம் ‘பெரிய’ கோயில். திருவரங்கம் என்று சொல்லவில்லை என்றால் நீங்க பிறந்ததே வேஸ்ட் என்று சொல்லிவிட்டார். திருவரங்கம் என்ற சொல் எப்படி நம் மனதை வசீகரிக்குமோ அதைவிட வசீகரிப்பவர் நம்பெருமாள். அந்த நம்பெருமாளை அரையர் ”மந்தாரம் கண்டால் மறையும் பெருமாள்” என்பார். அதாவது நம்பெருமாள் புறப்பாட்டின் போது ’மப்பும் மந்தாரமாக’ மழை வருவது மாதிரி இருந்தால் உடனே நம்பெருமாள் கோ...

கோலோச்சும் செங்கோல் !

 கோலோச்சும் செங்கோல் ! ’செவிக்கினிய செஞ்சொல்’ என்றால் அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கும். ஆனால் ‘செஞ்சொல்’ என்றால் என்ன என்று கேட்டால் முழிப்போம். இதே போல் தான் ‘செம்மொழி’, ‘செந்தமிழ்’ போன்ற வார்த்தைகளும். செஞ்சொல் என்றால் செம்மையான என்று பொருள். ’செமையா’ இருக்கு என்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் செம்மை இல்லை, செம்மை என்றால் உள்ளதை உள்ளபடி செல்லுவது எதுவோ அது தான் செம்மை. செங்கோல் என்றால் என்ன என்று புரிந்திருக்கும்.  ஒரு முறை வைகுண்டத்திலிருந்து புறப்பட்ட பெருமாள் பத்ரியில் கொஞ்சம் காலம் இருந்தார். அதிகக் குளிர் யாரும் வரவில்லை, கீழே இறங்கி வந்து திருமலையில் கொஞ்சம் நேரம் நின்றார் அங்கேயும் ( அப்போது ) கூட்டம் வரவில்லை. கீழே இறங்கி வந்து ஸ்ரீரங்கத்தில் ’தேமே’ என்று படுத்துக்கொண்டு விட்டார். இன்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து தான் வைகுண்டத்தையே ரங்க’ராஜா’வாக அரசாட்சி செய்கிறார். நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் தன் லீலையை நடத்துவதற்கு ஆதாரம் ஆண்டாள் பாசுரம் தான். பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம் பெருமான் செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் எம் க...