ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
'தித்திக்கும் திருப்பாவை' புத்தகம் வெளியீடு - அறிவிப்பு
புத்தகம் குறித்த சிறு குறிப்பு?
சென்ற மார்கழி மாதம் ‘தமிழ் இந்து’ல் அடியேன் திருப்பாவைக்கு எளிய விளக்கம், இதையும் அறிவோம் என்ற பகுதியுடன் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அத்துடன் 1871ல் வந்த 19ஆம் நூற்றாண்டு திருப்பாவை படங்கள், அதற்குச் சிறு குறிப்பு, ஒவ்வொரு பாசுரத்துக்கும் சில சொற்களுக்கு அருஞ்சொல் பொருள், திருப்பாவை தனியன்களுக்கு எளிய விளக்கம், திருப்பாவையின் சிறப்பு என்ற தலைப்பில் ஆசாரியர்கள் புகழ்ந்த ஆண்டாள் என்ற பகுதிகளுடன், இந்த வருடம் உடையவர் திருநட்சத்திரம் (25.04.2023) அன்று ’தித்திக்கும் திருப்பாவை’ என்ற தலைப்பில் புத்தகம் வெளிவர இருக்கிறது.
வேறு என்ன சிறப்பு ?
புத்தகத்துக்கு ஸ்ரீ உ.வே திருநாகை வீரராகவாசார்யர் (பட்டண்ணா ஸ்வாமிகள்) , திருக்குடந்தை டாக்டர். ஸ்ரீ.உ.வே. வேங்கடேஷ் ஸ்வாமிகள் வாழ்த்துரையும், அணிந்துரையும் வழங்கியிருக்கிறார்கள்.
சரி புத்தகம் எப்படி இருக்கும் ?
80 பக்கங்கள், 150gm எடை, ‘maplitho yellow book printing paper'ல் 14cm x 24cm அளவில் இருக்கும், .
விலை... ?
ஆண்டாளின் திருப்பாவை விலை மதிப்பற்றது. புத்தகம் அச்சடிக்கும் செலவு, பேக்கிங், தபால் உட்பட ரூ100/= கொடுத்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கிராமம், பள்ளிகளில் பிரச்சாரம் செய்ய ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா ?
நிச்சயம். rdmctrust@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்புங்கள். அல்லது 9845866770 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
எந்தப் பதிப்பகம் ?
‘ராமானுஜ தேசிக முனிகள் டிரஸ்ட்’ மூலமாகப் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை எப்படிப் பெறுவது ?
சுலபம்.
Your Name /பெயர் :
Address/முகவரி:
Phone No/தொலைப்பேசி எண்:
How many books you need / எவ்வளவு புத்தகங்கள் தேவை:
என்ற விபரங்களை rdmctrust@gmail.com மின்னஞ்சல் அனுப்பிவிட்டு புத்தகத்துக்கான தொகையைக் கீழே தரப்பட்டுள்ள டிரஸ்ட் அகவுண்டுக்கு அனுப்பவும். Pl also send the transaction details to rdmctrust@gmail.com so that it is easy for us to track.
Name: Ramanuja Desika Munigal Charitable Trust
STATE BANK OF INDIA,
BRIGADE METROPOLIS,
BANGALORE
Account no : 37954692708
Type: Current Account
IFSC Code:- SBIN0015034
( For overseas account transfer, pl send a message in inbox )
கூகிள் பே/UPI மூலம் அனுப்ப முடியுமா ?
முடியும்.
Bank Name, A/C Number IFSC number கொடுத்து அனுப்பலாம். அனுப்பியவுடன் ஸ்கீரின் ஷாட்டை rdmctrust@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள்.
புத்தகம் எப்படி அனுப்புவீர்கள் ?
இந்தியத் தபால் மூலம் அனுப்பத் திட்டம். நேரிலும் வந்து வாங்கிக்கொள்ளலாம்.
- சுஜாதா தேசிகன்
5.4.2023
பங்குனி உத்திரம்
How can we purchase this book
ReplyDeleteits clearly mentioned in the post. You can also contact RDMCTRUST@gmail.com
Delete