திருப்பாவை ஜீயர் வெளியிட்ட ’தித்திக்கும்’ திருப்பாவை ஸ்ரீ ராமானுஜரின் 1006ஆம் திருநட்சத்திரம் (சித்திரை திருவாதிரை,25.4.2023) அன்று ’அணிபுதுவை’ என்று ஆண்டாள் போற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘ராமானுஜ தேசிக முனிகள்’ அறக்கட்டளை வெளியீடான ‘தித்திக்கும் திருப்பாவை’ ‘திருப்பாவை ஜீயர்’ திருக்கரங்களால் ’ஒரு மகள் தன்னையுடைய’ என்று பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீதனமாகக் கொடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற ’நாச்சியார் மாளிகை’யில் வெளியிட, முதல் பிரதியைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை நாச்சியார் பெற்றுக்கொண்டாள். இதுவரை நீங்கள் படித்தது அலங்காரமாக எழுதியது போலத் தோன்றும். ஆனால் அன்று இது நிஜமாகவே நடந்தது. சுருக்கமாகச் சொல்லுகிறேன். சில மாதங்கள் முன் ’தித்திக்கும் திருப்பாவை’ புத்தகம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்த போது ’அதற்கென்ன கொண்டு வந்துவிடலாம்’ என்று வழக்கம் போல ஆர்.என்.ஆர் (ரங்கநாதன் & ரங்கநாயகி ) பிரிண்டர்ஸ் ராஜன் நம்பிக்கை தர, ’மணக்கால் நம்பி’ திருநட்சத்திரம் அன்று ஆரம்பிக்கப்பட்டு பங்குனி உத்திரத்தின் ...