ஓர் நவராத்திரி தினம். லேலையூர் அஹோபில மடத்தில் இருந்தேன். இரவு கிட்டதட்ட 9.45 இருக்கும். அடியேனுடைய ஆசாரியன் (46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ) அனைவருக்கு நல்லாசி அருளி, அட்சதை, பிரசாதம் தந்துவிட்டு சயனத்துக்குச் சென்றுவிட்டார். ’மயிரே போச்சு’ என்பது சொல் கெட்ட வார்த்தையாகி அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. திருமணம் முடிந்து ஐந்தாம் வருடத்தில், மீசையில் ஒரு வெள்ளை மயிர் எட்டிப்பார்த்தது. அதை வெட்டிவிட்ட பிறகு பல எட்டிப்பார்க்க மூக்கு அடியில் கிட்டதட்ட டால்மேஷன் குட்டிகளாக இருக்க டை, டிரிம் என்று பல முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். “அத்திம்ஸ்” என்று மனைவியின் கசின்ஸ் “அத்திம்பேர்” என்று ’பேர்’ சொல்லிக் கூப்பிடும் போது மீசை மட்டும் இல்லை, காது பக்கமும் டால்மேஷன் குட்டி போட தொண்டங்கியிருந்தது என்று புரிந்துக்கொண்டேன். ”அடடா சேவிக்க முடியாமல் போய்விட்டதே… “ என்று அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன். “ஆசாரியன் சயனத்துக்கு ( தூங்க ) சென்றிருப்பாரே.... இருங்கள்..” என்று உள்ளே சென்றார். கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்து “சீக்கிரம் வாங்கோ.. “ என்று அழைத்துச் சென்றார...