பெரிய நம்பிகள் திருமாளிகை எண்! ஒரு சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன அந்த துயரமான நிகழ்வை சொல்லுவதற்கு முன் இந்த வருடம் ஜனவரி 7 எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று மார்கழி கேட்டை ஸ்ரீபெரிய நம்பிகள் திருநட்சத்திரமும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரமும் சேர்ந்த துவாதசி. காலை 6 மணிக்குப் பெரிய பெருமாளை தரிசிக்க சென்ற போது 50, 100, 250 ரூபாய் என்று டிக்கெட் வரிசை அமைத்து இன்னும் பெரிய பெருமாளாகியிருந்தார். கோயில் முழுக்க கருப்பு-சிகப்பு நாத்திகர் கலரில் ’கோவிந்தா’ என்று கோஷம் போடும் ஆஸ்திகர் கூட்டம். நாழிக்கேட்டான் கோபுர வாசலில் கோயிலுக்கு வரும் பர்முடா, கைலி கூட்டத்தை காவல்துறை திரும்ப அனுப்பிக்கொண்டு இருந்தது. நெற்றியில் திருமண், குடுமி, கச்சத்துடன் அதை புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் ஒரு வெள்ளைக்காரர். பழசு ஆனா புதுசு ! துவாதசி அன்று பெருமாள் துளசி தீர்த்தம் கொடுத்து அருள, அதை வாங்கிக்கொண்டு, கொள்ளிடம் சலவை செய்த மாதிரி இருந்த கோயிலை பார்த்துக்கொண்டே ஆயிரம் கால் மண்டபத்தின் புது தோற்றத்தைக் கொஞ்ச நேரம் ரசித்...