உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன் மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன் துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே. - நம்மாழ்வார் திருவாய்மொழி அடிக்கடி கேட்ட பாசுரம் தான். சிம்பிளான விளக்கம் - உயர்வுகளுக்கெல்லாம் உயர்வானவன் அவன். அறிவின்மை யாவும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியோனுக்கு அருளினான் அவன். தேவர்கள் முதலிய நித்திய சூரிகளின் தலைவன் அவன். எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற அவனின் திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் என் மனமே. உடலை ஒழுங்காக வைத்திருந்தால், மனம் ஒழுங்காக இருக்கும் என்று ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசத்தில் கேட்டிருக்கிறேன். மனம் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்பது இன்னொரு சித்தாந்தம் ! இரண்டாவது என் தந்தைகடைப்பிடித்தது. பயம் கலந்த உயிராசை எல்லோருக்கும் இருக்கிறது. சின்ன தலைவலி, கால் குடைச்சல், முகத்தில் பரு என்று எந்த உபாதை வந்தாலும் உடனே டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகிறோம். பூரான் வீட்டுக்குள் நுழைந்தால் உடனே அடித்துவிடுகிறோம். கொசு கடித்தால் உடனே நசுக்கி வேட்டியில் சின்ன ரத்த கறையாக்குகிறோம் நல்ல ஆரோ...