Skip to main content

Posts

Showing posts from January, 2014

தற்செயல்

சென்னையில் ஒரு நாள்

திங்கள் அன்று சென்னயில் இருந்தேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் முன் ஏழே முக்காலுக்கு ராயர்ஸ் கஃபேவுக்கு ரொம்ப நாள் கழித்துச் சென்றேன். பெரிய க்யூ நின்று கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே இடம் கிடைத்தது. முதலில் எல்லோருக்கும் கப்பில் கெட்டிச் சட்னி தருகிறார்கள், மற்றபடி எதுவும் மாறவில்லை. சுடசுடப் பொங்கல், வடை, இட்லி என்று சாப்பிட்டுவிட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். Tamil Calendar ! நுழைந்தவுடன் ஒரே மலைப்பாக இருந்தது. பல வருஷங்கள் முன்பு புத்தகக் கண்காட்சியில் பதிப்பகங்கள் சார்ந்து ஸ்டால்கள் இருக்கும். ஆனால் தற்போது பல ஸ்டால்களில் பல பதிப்பகங்களின் புத்தகங்கள் விசிரி போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். நீயா நானா கோபினாத் பல ஸ்டால்களில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு மலிவாகத் தருகிறாரார்கள். பதிப்பகங்கள் சார்ந்த ஸ்டால்களில் பார்த்திவிட்டு மினி சூப்பர் மார்கெட் ஸ்டால்களைச் சுலபமாகக் கடந்து சென்றேன். கீதா பிரஸ் ஹரன் பிரசன்னாவை கிழக்குப் பதிப்பகத்தில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிரித...

வண்ணங்கள் எண்ணங்கள் - பெங்களூர் சித்திர சந்தை 2014

பெங்களூரில் வருடா வருடம் ’சித்திர சந்தே’ என்று அழைக்கப்படும் ஓவியக் கண்காட்சி கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் வருடா வருடம் நடத்திவருகிறது. குமர க்ருபா சாலையை முழுவதும் கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்கிறார்கள். சாலை இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருக்க மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் வந்து ரசிக்கிறார்கள். காண கண் கோடி வேண்டும் என்று சொல்லுவது இந்த கண்காட்சிக்கு பொருந்தும். மூன்று மணி நேரம் சாப்பாட்டை மறந்து பல சித்திரங்களை பார்த்துக்கொண்டு, கூடவே பொரி கடலை, குச்சி ஐஸ் சாப்பிட்டது இனிய அனுபவம். சின்ன வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் கொண் ட எனக்கு இந்த கண்காட்சியை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி முடிந்த பிறகு மறுநாள் நாளிதழில் வரும் செய்தியை பார்க்கும் போது ‘அடடே’ மிஸ் செய்துவிட்டோம் என்று வருந்துவேன். இந்த வருடம் நினைவு வைத்துக்கொண்டு சென்று வந்தேன். .. எவ்வளவு வண்ணங்கள்...எவ்வளவு எண்ணங்கள் !

பீபீ

மற்ற சேனல்களை காட்டிலும் தூர்தர்ஷன் பொதிகையில் சில சமயம் நல்ல நிகழ்ச்சிகள் வருவதுண்டு. இன்று விசாகா ஹரி குருவாயூரப்பன் பற்றி மார்கழி மஹா உற்சவத்தில் உருகிக்கொண்டு இருந்த போது நடுவில் ஒரு விளம்பரம் இடைவேளையின் போது பொதிகைக்கு தாவினேன். வீண் போகவில்லை.  நாதஸ்வரத்தில் சொருகப்பட்டிருக்கும் தக்கைக்கு பெயர் ”பீபீ” என்று இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டு இருந்தேன். அதன் பெயர் சீவாளி. அதை எப்படி செய்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது.  திருவாரூர் பக்கம் வாய்க்காலை கடந்து அங்கே விளைந்திருக்கும் நாணல் செடிகளில் கிட்டதட்ட மெலிதான பிரம்பு மாதிரி செடிகளை எடுத்து வந்து அதை ஒரு மாதம் வெயிலில் காய வைத்து பிறகு வீட்டு பரணில் ஒரு வருடம் போட்டு வைக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு பிறகு அதை எடுத்து வேண்டாத பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் ஊற போட்டு பிறகு சின்ன கரும்பு பிழியும் மிஷின் போன்ற இயந்திரத்தில் பட்டை அடித்து ( நசுக்கி) அவற்றை இருக்கமாக கட்டாக சணல் நூலில் கட்டி, பெரிய அண்டாவில் நெல்லை புழுங்க போட்டு அதில் இந்த கட்டுகளையும் சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். பிறகு அதை எடுத்து பிரித்த...