எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் சிகப்பு நிற கிளோட்டன் செடியின் நுனிக்குருத்தை சில வாரங்களுக்கு முன் குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. இத்தனைக்கும் எங்கள் வீடு 15-ஆவது மாடியில் இருக்கிறது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது. முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளரவேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான். செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்ற சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கண...