[%image(20090728-teleCartoon.jpg|115|115|Tele Cartoon)%] ஒன்பதாவது படிக்கும் போது ஜெரோம் கே.ஜெரோம் (Jerome.K.Jerome) எழுதிய தொலைப்பேசி பற்றிய நகைச்சுவைக் கட்டுரை எங்களுக்குப் பாடமாக இருந்தது. இந்தக் கட்டுரையை படித்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைப்பேசி இல்லை. தொலைப்பேசிக்கு பக்கத்துக் கடைக்குப் போக வேண்டும். சில ஆண்டுகளில் தொலைப்பேசி வீட்டுக்கு வந்துவிட்டது. சினிமாவில்தான் சிகப்பு, பச்சை நிறத் தொலைப்பேசி எல்லாம் பார்க்க முடியும். எங்கள் வீட்டுக்கு வந்தது சாம்பல் நிறம். ஆள்காட்டி விரலைப் போட்டு சுழற்ற வேண்டும். இந்தச் சுழற்சி முறை எப்படி வேலை செய்கிறது என்று போன வருஷம்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். (டெலிகாம் கம்பெனியில் இருந்துகொண்டு இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?) மவுத்வாஷ் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் மாதத்துக்கு ஒரு முறை ஒரு அக்கா ஜோல்னா பையுடன் வந்து, "என்ன பாட்டி சௌக்கியமா?," கேட்டுக்கொண்டே தொலைப்பேசியை மஞ்சள் துணியைக் கொண்டு துடைத்துவிட்டு, பேசுமிடத்தில் வாசனை ஸ்டிக்கர் ஒட்டிவிட்டுப் போவாள். தற்போது ஒரு ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். பெட்...