Skip to main content

Posts

Showing posts from 2009

கல்யாணி

மேலே நீங்க பார்ப்பது நேற்று வந்த தி.ஹிந்து இரண்டாம் பக்கம். மேலிருந்து கீழே இரண்டாவது காலத்தில் பாருங்க. “02.30pm: Mr…… - Violin, All are welcome” அப்படீன்னு இருக்கா? அந்த Mr….. நான் தான்.. இந்த மத்யானக் கச்சேரிக்குத் தான் அமெரிக்காவிலேருந்து வந்தேன். உடனே என்னை ஏதோ சஞ்சய் சுப்பிரமணியன் மாதிரியோ, டி.எம்.கிருஷ்ணா மாதிரியோ நினைக்காதீங்க. அந்த அளவுக்கு ஞானமும் கிடையாது அதிர்ஷ்டமும் கிடையாது. டிசம்பர் மாசம் ஆச்சுன்னா கச்சேரி பண்ண சபால ஸ்லாட்டும், கேண்டீன்ல மெதுவடை கிடைக்கறதும் அவ்வளவு கஷ்டம். அந்தக் கஷ்டம் எனக்கு மட்டுந்தான் தெரியும். எல்லா இடத்திலேயும், சிபாரிசு, போட்டி, பொறாமை… என்ன செய்ய? போன சீசனுக்கே வாசிச்சிருக்கணும் கடைசி நிமிஷத்துல இல்லைனுட்டா. சரி அது எல்லாம் பழைய கதை. சீசன் டிக்கெட்டோட வைரத்தோடு மாமிகளும், டி-ஷர்ட் மாமாக்களும் முன்வரிசைல உட்கார்ந்துண்டு, தனி ஆவர்த்தனை ஆரம்பிச்சதும் வெளியே வந்து, “சார் அறுசுவை நடராஜன் அடை அவியல் பிரமாதம்” என்று சொல்லும் சீசன்ல எனக்கு இந்தத் தடவை மத்தியானம் இரண்டரை மணி ஸ்லாட் கிடைச்சிருக்கு. என்.ஆர்.ஐ கோட்டான்னு பேர். எல்லாம் சிபாரிசுதான். “இரண்டரை...

ராக்கெட் வண்டுகள்

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?” (குறுந்தொகை -2) இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது; திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஏற்ற இறக்கத்துடன் நக்கீரனுக்குப் பாடிக் காண்பிப்பார். ஏதோ ஒரு தமிழ் பரிட்சையில் மனப்பாடம் செய்து, அப்படியே எழுதியதால் சுளையாக 10 மார்க் கிடைத்தது. சங்கத் தமிழ் பாடலையும், சிவாஜியின் நடிப்பையும் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். சிவாஜிக்கும் வண்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன். கர்ணன் படத்தில் வரும் வண்டு, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தொடையில் துளை போடும். ரத்தம், வலி எல்லாம் வரும்; தூங்கிகொண்டிருக்கும் குருவை எழுப்ப கூடாது என்பதற்காகப் பொறுத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் சிவாஜி வழக்கம்போல் பயங்கரமாக நடித்திருப்பார். வண்டு அந்த நடிப்பைப் பார்த்திருந்தால், துளை போடுவதை நிறுத்தியிருக்கும். வண்டு தொடையைத் துளைபோடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, பெரிய மரத் தூணையே துள...

பெங்களூர் to பெங்களூரு

சென்னையிலிருந்து பெங்களூர் வந்து ஐந்து வருடம் இரண்டு மாசம் ஆகிவிட்டது. வந்த புதிதில் “இது என்ன ஊரு?” என்று அலுத்துக்கொண்ட காரணத்தாலோ என்னவோ உடனே அதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திவிட்டார்கள். வெல்லம் போட்ட சாம்பார் மாதிரி பல விஷயங்கள் ஐந்து வருஷத்தில் பழகிவிட்டன. தவித்த வாய்க்கு காவிரி தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ ஹோட்டல்களில் சாம்பார், சட்னி தாராளமாக கொடுக்கிறார்கள். போன முறை சென்னை சென்ற போது ‘இன்னும் கொஞ்சம் வெங்காய சட்னி’ என்று கேட்டதற்கு வீட்டுக்கு வந்துவிட்டு போகும் விருந்தினருக்கு குங்குமம் தருவது போல சின்ன கிண்ணியில் தந்தார்கள். இந்த விலைவாசி ஏற்றத்திலும் எம்.ஜி.ரோடு பிருந்தாவன் ஹோட்டலில் எவ்வளவு அப்பளம் கேட்டாலும் சிரித்துக்கொண்டே போடுகிறார்கள். கோரமங்களா கிருஷ்ணா கபே சொந்தக்காரர் தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தயிர், மோரைத் தவிர எல்லாவற்றிலும் எப்படி அவ்வளவு தேங்காய் போட முடிகிறது? ‘நல்லவர்களிடம் உணவருந்துங்கள்’ என்ற வாசகத்துடன் அன்னபூர்ணி ஹோட்டலில் துளசி அடை செய்து கொடுக்கிறார்கள். ‘ரோட்டி மீல்ஸ்’ல் விதவிதமான ரோட்டியும் அதற்கு கருப்பாக எள்ளுப்பொடி ...

சென்னையில் அட(டை) மழை!

போன வாரம் சென்னைக்கு சென்ற போது “இந்த மழையில் எதுக்கு வந்தீங்க?” என்று அதிர்ச்சியாக கேட்டார்கள். சென்னை சென்ட்ரல் காலை ஏழு மணிக்கு இருட்டிக்கொண்டு மாலை ஏழு மணி போல இருந்தது. அந்த மழையிலும் பிளாட்பாரத்தில் இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் சரவண பவனில் காப்பிக்கு க்யூ. மழை எதிர்த்த வீட்டு ஜிம்மி போல் குலைத்துக்கொண்டு இருந்தது. “மழையை பார்த்தீங்கல்ல 180க்கு வருதுனா வாங்க” என்ற ஆட்டோவிடம் பேரம் பேசாமல் ஏறி சில தூரம் சென்றவுடன் தான் தெரிந்தது வெளியே 30 செ.மீட்டர் மழை என்றால் ஆட்டோவுக்குள் 60 செ.மீட்டர் என்று. புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த பிறகு பழகும் புது பெண்ணை போல எனக்கு மழையுடன் பழக அரை மணி நேரம் ஆனது. முழுக்க நனைந்த பிறகு வீடு வந்து சேர்ந்த பின், கொஞ்ச நேரம் ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். பிறகு பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து பர்முடா மாதிரி ஆக்கிக்கொண்டு வெளியே கிளம்பினேன். தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே பலாப்பழம், வேகவைத்த வேர்கடலை, கர்சீப் எல்லாம் பாலித்தின் உதவியுடன் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். இருபது அடிக்கு ஒரு க...

ராக்கெட் வண்டுகள்

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?” (குறுந்தொகை -2) இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது; திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஏற்ற இறக்கத்துடன் நக்கீரனுக்குப் பாடிக் காண்பிப்பார். ஏதோ ஒரு தமிழ் பரிட்சையில் மனப்பாடம் செய்து, அப்படியே எழுதியதால் சுளையாக 10 மார்க் கிடைத்தது. சங்கத் தமிழ் பாடலையும், சிவாஜியின் நடிப்பையும் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். சிவாஜிக்கும் வண்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன். கர்ணன் படத்தில் வரும் வண்டு, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தொடையில் துளை போடும். ரத்தம், வலி எல்லாம் வரும்; தூங்கிகொண்டிருக்கும் குருவை எழுப்ப கூடாது என்பதற்காகப் பொறுத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் சிவாஜி வழக்கம்போல் பயங்கரமாக நடித்திருப்பார். வண்டு அந்த நடிப்பைப் பார்த்திருந்தால், துளை போடுவதை நிறுத்தியிருக்கும். வண்டு தொடையைத் துளைபோடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, பெரிய மரத் தூணையே துளை போடுகிற...

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

ஆட்டோவில் போன அசோகமித்திரன் சுஜாதாவின் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில் என் கல்லூரி நண்பன் மார்டின், “‘ராஜாஜி சினிமாவுக்குப் போனார்’ என்ற அசோகமித்திரன் கட்டுரையை படிச்சு பாருங்க தேசிகன், நகைச்சுவையா இருக்கும்,” என்றார். ‘எந்தப் புத்தகத்தில் அந்தக் கட்டுரை இருக்கிறது என்ற கேள்விக்கு மார்டினால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “கலைஞன் பதிப்பகத்தில் எதோ ஒரு கட்டுரை தொகுப்பு” என்று மட்டும் க்ளூ கொடுத்தார்.  அந்தக் கட்டுரையை எப்படியாவது தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த சமயம் அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். (அந்தக் காலத்தில் கூகிள் கிடையாது ). கலைஞன் பதிப்பகத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடி அலைந்து, கடைசியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் வாசலில் கண்ணதாசன் குடும்பத்தார் செய்யும் செட்டியார் ஸ்பெஷல் உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ முழுத் தொகுதியை கொண்டுவந்த போது அந்தக் கட்டுரைக்காகவே புத்தகத்தை வாங்கி முதலில் அந்தக் கட்டுரையைத் தேட...

திருவரங்கத்தமுதனார் திருமாளிகை

[%image(20091017-amudanar_sanadhi.gif|144|192|null)%] அப்பா ரிடையர் ஆன பிறகு தினமும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவித்து(படித்து) வந்தார். நான் சென்னையிலிரருந்து திருச்சிக்கு வாரயிறுதியில் போகும் போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன், ராமானுஜ நூற்றந்தாதி புத்தகத்தை என் கையில் கொடுத்து “முழுவதும் கடம்(மனப்பாடம்) செய்துட்டேன், சேவிக்கிறேன், சரியா இருக்கா பார்” என்று வாரம் தவறாது சின்ன குழந்தை போல கேட்பார். ஆச்சாரியன் திருவடியை அடைவதற்கு சில மணி நேரம் முன்பு என் அம்மாவிடம் “அடுத்த பத்து நாளைக்கு சேர்த்து இன்றே சேவித்துவிட்டேன்” என்று சொன்னதை பற்றி யோசிப்பதுண்டு. “திருவரங்கத்தமுதனார் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதியில் எங்கோ ஒரு மூலையில் யாரும் கவனிக்கப்படாமல் இருக்கு, அதை ராமானுஜர் சன்னதியில வைப்பது தான் சரியாக இருக்கும்” என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். ஒரு முறை “எப்பவாவது உனக்கு டைம் கிடைச்சா அவரை பற்றி எழுது” என்றார். அவர் இறந்து போய் பத்து வருஷம் கழித்து இப்போது தான் அவர் ஆசையை என்னால் நிறைவேற்ற முடிந்தது. திருவரங்கத்தமுதனார் பற்றி குறிப்புகள் அதிகம் கிடையாது.அனேகமாக எல்லா ராமானுஜர் வாழ...

மெய் அது பொய்

நம் உடம்பை 'மெய்' என்கிறோம் ஆனால் அதில் தான் எத்தனை பொய்! சில வாரங்களுக்கு முன்பு 'சச் கா சாம்னா' என்ற நிகழ்ச்சியை (ஸ்டார் பிளஸ்) பார்க்க நேர்ந்தது. 'சச்கா சாம்னா' குத்துமதிப்பாக 'உண்மைக்கு முன்னால்' என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. பார்க்காதவர்களூக்கு இந்த நிகழ்ச்சி பற்றிய முன்கதை சுருக்கம். கேள்வி கேட்க ஒருவர், பதில் சொல்ல ஒருவர் என்று குரோர்பதி நிகழ்ச்சி மாதிரியான செட்டப்.  சின்ன வித்தியாசம், கேள்விகள் எல்லாம் உங்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றியது. ஏடாகுடமானவை. தப்பான பதில்களை சொல்லி தப்பிக்க முடியாது. உண்மை கண்டறியும் சோதனை கருவி(பாலிகிராப்) மூலம் நீங்கள் சொன்ன பதில் உண்மையா பொய்யா என்று சோதித்து நீங்கள் சொல்லும் பதில் சரி என்றால் பணத்துடன் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம். அடுத்த கட்டத்தில் இன்னும் பணம். மேலும் ஏடாகுடமான கேள்விகள். நிகழ்ச்சியை சுவாரசியமாக்க, சிறப்பு விருந்தினராக பதில் சொல்லுபவர்களின் குடும்பத்தார் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு இதை பார்த்து சகித்துக் கொண்டிருக்க நாம் ரசித்துக்கொண்டு...

உயிரின் உயிரே

[%image(20090824-life.jpg|225|200|Life)%] உயிர் என்பது என்ன என்று பல முறை வியந்திருக்கிறேன். எவ்வளவுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும், பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்டாலும். உயிர் என்றால் என்ன என்று வரும் கடைசிக் கேள்விக்கு விடை கிடையாது. கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்ற பகுத்தறிவாளர்கள் கேட்கும் கேள்விக்கும், உயிருக்கு தேவையான ப்ரோட்டீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொண்டு உயிரை உற்பத்தி செய்யுங்கள் என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்கும் கேள்விக்கும் ஒரே பதில் முழிப்பதுதான். கடைசிக் கேள்விக்கு கடவுள் தேவைப்படுகிறார். எவ்வளவு தான் முன்னேறினாலும் செயற்கைகோள் அனுப்பும் முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் இதனால்தான் செய்யப்படுகிறது!. fநம் உடலில் உயிர் என்பது என்ன என்றால் அதற்குச் சரியான விடை தெரியாது. என்னதான் கீதையையும், பிரம்மசூத்திரத்தையும் படித்து ஆத்மா, சரீரம் என்று கரைத்துக் குடித்தாலும் உயிர் மீது பற்றும் அதனால் பயமும் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு நீச்சல் குள பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் வரும் ஒரு விதமான பயம் இரண்டும...