நேற்று ஸ்ரீரங்கம் பெருமாளை ஓசி பாஸ் மூலம் தரிசித்து விட்டு வரும் வழியில் வடக்கு சித்திர வீதியில் திரு S.R.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஓவிய கண்காட்சிக்கு சென்றது ஒர் இனிய அனுபவம். [%image(20060529-srinivasan.jpg|200|267|S.R.Srinivasan)%] நான் போன சமயம், சிலர் கையில் ஒரு பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு ஓவியத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். மிக எளிமையாக ஒரு மேல்துண்டுடன் வந்தவர்களுக்கு எல்லாம் தான் வரைந்தவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். சித்திர கவி பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு, அதாவது கவிதையை சித்திர வடிவில் எழுதுவது. ஆனால் திரு ஸ்ரீநிவாசன், கவிதையால் சித்திரத்தை வரைந்துள்ளார். ஆம், கோடு, புள்ளி எதுவும் இல்லாமல், நாலாயிர திவ்வியப்பிரபந்ததைக் கொண்டு 108 திவ்விய தேச பெருமாளை அந்தந்த நிலைகளிலேயே வரைந்துள்ளார். [%image(20060529-srinivasan_and_others.jpg|200|150|Srinivasan + crowd)%] உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெருமாளை 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 247 பாட்டுக்களால் வரைந்துள்ளார். அதுவும் எப்படி, திருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதிப்பிரான்' என்ற பாட்டில் வரும் திருவரங்கனின் அழகை அவர் அங்க...