சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சிறுகதை தொகுப்பில் உள்ள கோட்டோவியங்களைப் பார்த்தீர்பீர்கள். இதனை வரைவதற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு- சுஜாதா, ஸ்ரீரங்கம். கடந்த ஆண்டு(2003) ஜூலை-ஆகஸ்டு மாதம் சுஜாதாவுடன் பேசிக் கொண்டியிருந்த போது இந்த எண்ணம் தோன்றிற்று. சினிமாவில் கதைகளுக்கு சம்பந்தம் இல்லாமல் வரும் காமெடி டிராக் போல, கதைக்கு சம்பந்தம் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் உள்ள சில முக்கியமான இடங்களை கோட்டோவியங்களாகப் பதிவு செய்வது என்று முடிவு செய்தேன். வரைவதற்கு ஒப்புக் கொண்ட நாள்முதல் எனக்குள் ஒரு சின்ன பயம் பற்றிக் கொண்டது. காரணம் நான் கடைசியாக வரைந்தது 10 வருடம் முன்னால்! மற்றொன்று கதை நான் பிறப்பதற்கு முன்பு நிகழ்ந்ததால் அன்றைய ஸ்ரீரங்கத்தை வரைய வேண்டும்! ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு, தமிழ் இலக்கியத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கத்தின் வரலாறு, கல்வெட்டுகள், அதன் பின் கோயிலுக்குள் செல்லலாம் என்று இருக்கிறேன். நான் பார்த்த ஸ்ரீரங்கத்தை எனது அனுபவத்தையும் அதன் சரித்திர சிறப்புக்களுடனும் வரும் வாரங்களில் தரவுள்ளேன். ஸ்ரீரங்கத்தைப் பற்றி புத்தகங்கள் படித்தும், சொல்லிக்கேட்டும் எனக்கு தெரிந்த வரை எளிமை...