சா·ப்ட்வேர் என்ஞ்சினியருக்கு எல்லாம் தெரியும் என்ற சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. உதாரணத்துக்கு என் மகளை தூங்க வைக்க எனக்கு கதை சொல்ல தெரியவில்லை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் அவளுக்கு கோபம் வருகிறது. தினமும் ராத்திரி பெரும் பாடாக இருக்கிறது. சொல்லும் கதையில் சிங்கம், புலி எல்லாம் கட்டாயம் வரவேண்டும். முக்கியமாக அவள் கேட்கும் பல கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்ல வேண்டும். என் பாட்டி எனக்கு நிறைய கதை சொல்லியிருக்காள் - ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரா, கர்ணன், கஜேந்திர மேட்சம் போன்றவை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் முகம் சுளிக்காமல் கேட்பேன். என் மகள் அப்படியில்லை அவளுக்கு தினமும் ஒரு புது கதை தேவைப்படுகிறது. போன ஞாயிற்றுக்கிழமை 'லேண்ட் மார்க்' புத்தக கடைக்கு போய் 'பெட் டைம் ஸ்டோரிஸ்' புத்தகம் வாங்கினேன். முதல் கதையை படித்து என் மகளுக்கு செல்ல ஆரம்பித்தேன்... "ஒரு ஊர்ல ரெண்டு பேர் இருந்தா. ஒர்த்தர் பேர் பூபி, இன்னொருத்தர் பேர் பாபி!". அவா dwarfs ரொம்ப குள்ளமா இருப்பா..." "அப்பா, அவா எவ்வளவு குள்ளமா இருப்பா?" "ரொம்ப குள்ளமா... உன்னோடா கு...