Skip to main content

Posts

Showing posts from 2004

திருப்பாவை

டிசம்பர் 13, 2004 தொடங்கி,  ஜனவரி 16, 2005 வரை தினமும் திருப்பாவை அதற்கு எளிய விளக்கங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்  என் வலைப்பதிவில் எழுதினேன். அதை படிப்பதற்கு சுலபமாக  எனது வீட்டுப்பக்கத்தில் தற்போது கொடுத்துள்ளேன். http://www.desikan.com/blogcms/wiki/thiruppavai தேசிகன்.

சுஜாதாவின் படைப்புகள்

  என்னிடம் உள்ள சுஜாதாவின் படைப்புக்களை தொகுத்து * , காலவரிசைப்படி(chronology) பட்டியலிட்டு, (கொஞ்சம் ஜிகினா வேலை செய்து) இங்கு தந்துள்ளேன். * (சிறுகதை, குறுநாவல், கேள்வி/பதில், மற்றவை, நாவல், கட்டுரை, நாடகம் )     Old Comments from my previous blog. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். வாழ்த்துக்கள் By eswara prasadh, at Fri Dec 10, 09:13:42 AM IST   Dear Seemachu, Desikan is the official biographer (as per Sujatha himself) of Mr.Sujatha and so he may be planning to use this graphical representation when he writes a biography at some point of time. நீங்கள் கேட்டதிலும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. தேசிகன் என் நெருங்கிய நண்பர். அதனால் தான் இந்த விளக்கம் கொடுத்தேன். தயவு செய்து தப்பா நீங்க நெனச்சுக்காதீங்க :-) என் மின்னஞ்சலுக்கு நீங்கள் இன்னும் பதில் போடவில்லை :-( எதிர்பார்க்கிறேன்! என்றென்றும் அன்புடன் பாலா By Anonymous, at Fri Dec 10, 11:05:40 AM IST   தேசிகன், இந்த படத்தினால் என்ன நன்மை? இங்கு சுஜாதா பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் வருகிறார்களா? தப...

மேல்kind சர்வே!

மேல்kind என்று ஒரு வலைப்பதிவை மீனாக்ஸ், க்ருபா, ஷங்கர் ஆகியோர் நடத்திவருகிறார்கள். அதில் ஒரு புதிய பகுதி மேல்Kind சர்வே! சில சுவாரஸ்யமான கேள்விகளை முன் வைத்து அதன் பதில்களை வெளியிடுகிறார்கள். என்னிடமும் "அந்த" கேள்வியை போன வாரம் கேட்டார்கள். கேள்வி இது தான்: 1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது? நான் ஐந்து வருடம் முன் எழுதிய ஒரு பகுதியை கொஞ்சம் தூசுதட்டி அனுப்பினேன் அவர்களும் பெரிய மனம் கொண்டு , மதித்து பிரசுரித்தார்கள். அதை இங்கு தந்துள்ளேன். பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி... நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம் சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் ப...

ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பானை

இந்த வாரம் விருந்தினர் ஸ்ரீரங்கத்து பெண் லக்ஷ்மியை அறிமுகப் படுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. லக்ஷ்மி தற்போது ஹைதராபாதில் ஒரு software கம்பெனியில் பணிபுரிகிறார். போன வாரம் "ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதம் நடைபெறும் சொக்கப்பானை பற்றி எழுதுங்களேன்" என்றார். "எனக்கு நேரம் இல்லை நிங்கள் எழுதுங்களேன்" என்று ஜகாவாங்கினே. உடனே பேப்பர் பேனாவை எடுத்து, ராமஜெயம் போட்டு, எழுதி, ஸ்கேன் செய்து, ஈ-மெயிலில் எனக்கு அனுப்பிவிட்டார்! எதையும் மாற்றாமல் ( மாற்ற முடியாது என்பது வேறு விஷயம்!) அப்படியே போடுவதில் ஒரு விதமான அழகு கலந்த nativity இருக்கு என்பதால் அவர் எழுதியதை அப்படியே போட்டுள்ளேன். அன்புடன் தேசிகன் [%popup(20050809-lakshmi_letter_1.jpg|750|1031|Lakshmi Letter ( Page 1 ))%] [%popup(20050809-lakshmi_letter_2.jpg|750|1031|Lakshmi Letter ( Page 2 ))%]      Old Comments from my previous blog. எங்க ஊர்லயும் இந்த சொக்கப்பனை கொளுத்துறது, டயர் கொளுத்துறது உண்டு. ஆனால் சாமியை முன்வைத்தல்ல, (இன்றுவரை, ஏனென்றே தெரியாமல் - அல்லது இவங்க கடிதத்தை படிக்கும்வரை, கார்த்த...

அப்பாவின் ரேடியோ

இப்போது வால்வ் ரேடியோ என்றால் பலருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் நிச்சயமாக ட்ரான்சிஸ்டர்க்கு பின் பிறந்தவர்கள். வால்வ் ரேடியோ ஒரு விசித்திரமான ரேடியோ. ஒரு பெரிய மரப்பெட்டி. அதில் மூன்று பீங்கான் குமிழ்கள் - ஒன்று வால்யூமிற்கு, ஒன்று முள்திருப்புவதற்கு, மற்றொன்று பாண்ட் திருப்புவதற்கு. பாண்ட் குமிழை திருகினால் ஒரு வித 'கடக் கடக்' சத்தம் வரும். முள்திருப்பும் குமிழை பார்த்து திருக வேண்டும், அதிகம் திருகினால் முள் திருப்புவதற்கு பயன்படும் 'ட்வைன்'(twine) நூல் அறுந்துவிடும். இடது ஓரத்தில் 'மர்ஃபி' என்று எழுதியிருக்கும். ஒரு குழந்தை (ஆணா, பெண்ணா என்று தெரியாது) வாயில் ஒரு விரல் வைத்துக் கொண்டிருக்கும். வலது ஓரத்தில் 'மாஜிக் ஐ' இருக்கும். அதைப் பார்த்துக்கொண்டு முள்ளை திருப்ப வேண்டும்.'மாஜிக் ஐ'யில் சின்னதாக ஒரு கோடு வந்தால் நன்றாகப்பாடும். சுவிட்ச் போட்டவுடன் பாடாது. உள்ளேயிருக்கும் வால்வ் சூடானவுடன் தான் பாடும். ஏழுமணிக்கு செய்திகள் என்றால், ஆறு ஐம்பத்தைந்துக்கு ரேடியோவை ஆன் செய்ய வேண்டும், இல்லை என்றால் தலைப்புச்செய்திகள் முடிந்திருக்கும். துண...

விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா பதில்கள் !

    வாசகர்கள் கேட்ட விஞ்ஞான சிறுகதை கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது. கேள்வி கேட்ட அனைவருக்கும், பதில் அளித்த திரு.சுஜாதாவிற்கும் என் மனமார்ந்த நன்றி. கேள்வி-பதில்களை தொகுக்க உதவிய என் நண்பர் பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. கேள்வி : 1. விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன ? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா ? நீங்கள் எழுதிய 'முடிவு' என்ற சிறுகதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்தியது எந்த அடிப்படையில் என்பதை கொஞ்சம் சிம்பிளாக விளக்குங்களேன் ? "epistolary literary technique"' (different style of writing) ' சார்ந்திருப்பதால் முடிவு ஒரு sci-fi கதை என்கிறீர்களா? பதில்: விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன என்பதைப் பற்றி பக்கம் பக்கமாக எனது தொகுதியின் முன்னுரையில் எழுதியுள்ளேன். அதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள். இல்லை net-ல் தேடிப்பாருங்கள். நிறைய விளக்கம் கிடைக்கும். ' முடிவு' என்கிற கதை முழுவதும் நானே எழுதியது. அதன் வடிவமைப்பில் முன்று பேர் எழுதிய கடிதங்கள் என்பதை நம்ப வைக்க செய்த தந்திரங்கள் ஒரு விஞ்ஞானக் கதைக்குரியது. இந்தக் கத...

Sujatha Answers SciFi Questions.

விஞ்ஞானக் சிறுகதை கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சுஜாதா நேற்று என் வலைப்பதிவில் திரு.சுஜாதாவின் 'முடிவு' என்ற விஞ்ஞானச் சிறுகதை ஒன்றை வெளியிட்டேன். அதைப் படித்துவிட்டு, பலர் இது எப்படி விஞ்ஞானச் சிறுகதையாகும் என்று கேட்டு எனக்கு ஈ-மெயில் அனுப்பியுள்ளார்கள். சற்று முன் சுஜாதா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதை பற்றிக் கூறினேன். வாசகர்கள் எழுப்பும் விஞ்ஞானச் சிறுகதை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் தர சம்மதித்துள்ளார். ஆகவே உங்கள் கேள்விகளை சுருக்கமாக என்னுடைய 'Comments' பகுதியில் உள்ளிட்டால், திரு.சுஜாதாவிடமிருந்து பதில் கிடைக்கும். பதில்கள் அடுத்த வாரம் என் வலைப்பதிவில் இடம் பெறும். கேள்விகளை ஈ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி desikann@gmail.com - தேசிகன்

விஞ்ஞான சிறுகதை – முடிவு

  திண்ணையும் மரத்தடியும் சேர்ந்து நடத்தும் விஞ்ஞானச் சிறுகதை போட்டி பற்றி அறிந்திருப்பீர்கள். அறிந்து கொள்ள இங்கே  பார்க்கவும் . போன வாரம் சுஜாதாவிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். என் பங்கிற்கு அவருடைய ' முடிவு' என்கிற சிறுகதையை இங்கு தந்திருக்கிறேன். சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதை தொகுப்பில்   விடுப்பட்ட கதை இது! முடிவு     எம்.நடராஜன்,                                             2-7-1982 187, பஜார் தெரு, மோகனூர் 637015 சேலம் ஜில்லா அன்புள்ள குங்குமம் ஆசிரியர் அவர்களூக்கு, உடன் இணைக்கப்பட்டிருக்கும் 'முடிவு' என்கிற விஞ்ஞானச் சிறுகதையை உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். படித்து அது குங்குமம் இதழில் பிரசுரத்துக்கு எற்றது எனில் அதை வெளியிட வேண்டுகிறேன். தகுதி இல்லையெனில் திருப்பி அனுப்புவதற்கு போதிய தபால் தலைகளை இணைத்திருக்கிறேன். இங்ஙனம் எம்.நடராஜ...

பெண்களூர்-0 2

பெங்களூர் பற்றி எழுதியதும் எனக்கு பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். சிலர் போன் செய்து புளியோதரை சாப்பிட எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்றார்கள். கூப்பிட்டவர்கள் இதுவரை அவர்கள் வீட்டு முகவரியைத் தரவில்லை. என் நீண்ட நாள் நண்பர் கிச்சா என்ற கிருஷ்ணன், அவர் வீட்டு விலாசம் குடுத்து "ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்" என்று ஈ-மெயில் அனுப்பியிருந்தார். அட்ரஸை பார்த்தால் நிஜமாகவே அடுத்த வீட்டுக்காரர். எங்கள் வீட்டு மதில் சுவற்றில் ஒரு எட்டு ஏறி குதித்தால் போதும்! பலர் "என்ன சார் டிராஃபிக் ஜாம் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே" என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள். அவர்கள் இட்ட சாபம் என்று நினைக்கிறேன், போனவாரம் எனக்கு ராத்திரி 9:30 மணிக்கு சென்னை ரயில். ஆட்டோ வில் ஏறும் போது மணி 8:00. நான் ஸ்டேஷன் வந்து சேர்ந்த போது மணி 9:20. நடந்து சென்றிருந்தால் 9:00 மணிக்கே போய் சேர்ந்திருக்கலாம்! அல்சூர், கோரமங்களா போன்ற இடங்களில் நல்ல தமிழ் நாட்டு உணவு கிடைக்கிறது என்று எனக்கு தெரிவித்தவர்களுக்கு என் நன்றிகள். நாம் நலம் விசாரிக்கும் போது "என்ன சார் செளக்கியமா?" என்று கேட்போம்...

பெண்களூர் *

நான் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் இருந்த எனக்கு பெங்களூர் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. 1. பூஜை போட்ட கையோடு சுவற்றில் fluorescent கலரில் சினிமா விளம்பரங்களை பார்க்க முடிவதில்லை. 2. இட்லி தோசைக்கு வெல்லம் கலந்த சாம்பார் தருகிறார்கள்(எம்.ஜி.ரோடில் உள்ள பிருந்தாவன் ஹோட்டல் தவிர). 3. சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் லாப்டாப் வைத்திருக்கிறார்கள். 4. ஆட்டோக்கள் மீட்டர்க்கு மேல் பெரும்பாலும் காசு கேட்பதில்லை. 5. பைரேட்டட் புத்தகங்கள் எங்கும் கிடைக்கிறது. The Da Vinci Code, Mein Kampf by Adolf Hitler, My Life - Clinton தற்போது விற்பனையில். 6. பெங்களூருக்கு போனால் கன்னடம் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலோர் தமிழ்த்தான் பேசுகிறார்கள். தமிழில் பேசினால் புரிந்து கொண்டு பதில் சொல்கிறார்கள் - கொஞ்சம் வேடிக்கையாக.(உதாரணம்- "நாங்களுக்கு எரடு ரூபாய் கொடுத்தாரு" என்றால் "எங்களுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார்") 7. பெங்களூர் பஸ் போக்குவரத்து மோசம் என்று கூறுவது சரியில்லை. மிகவும் மோசம் என்ற...

SCIENCE FICTION – Another tomorrow

SCIENCE FICTION is usually celebrated for the glimpses it offers into the future. The crispest definition of science fiction is to call it a literature of "what if?" Due to the protean nature of the genre, it embraces everything from crude interplanetary romances to sophisticated psychological drama. It has been universally acknowledged as the most popular form of fiction for young people and exists in diverse forms, challenging any kind of rigid categorisation. "It attempts to present realities which are different from those we know", says critic Christopher Evans. "The imagined future, the altered present and the past in which history was different!" Science fiction writers have been perpetually interested in possibilities and potentials. In his preface to the anthology of short stories written by Sujatha Rangarajan, a major Tamil writer, the author admits that as a subgenre, science fiction has not been widely practised by Tamil writers. However, Su...

கீச்கீச்

எச்சரிக்கை: இதை படிக்க உங்களுக்கு நிறையப் பொறுமை வேண்டும். நடுநடுவே ஏகப்பட்ட தொந்தரவு நேரலாம். எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு "கீச்கீச்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அட நிஜமாதான் சார்! நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வாருங்கள். முதல் மாடி, நம்பர் 2C மகாலக்ஷ்மி தெரு, தி.நகர். போன மாசம் தான் கல்யாணம் ஆனது. புது வீட்டுக்குப் போய் இரண்டு வாரம் தான் ஆகிறது. வீட்டிற்கு வாருங்கள், அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும். இன்னும் நம்பவில்லையா? என் கஷ்டத்தை எப்படி உங்களுக்குப் புரிய வைப்பேன்? சரி, இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து எனக்குக் கேட்கும் அந்தக் "கீச்கீச்" சத்தத்தையும் சேர்த்தே எழுதுகிறேன். அப்போதான் என் கஷ்டம் உங்களுக்குப் புரியும். "கீச்கீச்" என்ன சத்தம் கேட்டதா ? சத்தம் அலர்ஜி என்றால் தொடர்ந்து படிப்பது உங்களுக்கு நல்லதில்லை. பிறகு உங்கள் இஷ்டம். "கீச்கீச்" முதலில் அந்த "கீச்கீச்" சத்தம் ஜன்னலிருந்து வருகிறது என்று நினைத்து எல்லா ஜன்னலுக்கும் எண்ணெய் போட்டேன். "கீச...

Down Memory Lane

Today's posting is " Down Memory Lane" by Sujatha. This article featured in Nrisimhapriya August 2004 issue ( English Edition ) I have never been asked why I became a Tamil writer. Let me think.. I was born in Triplicane and almost from my cradle whisked off to Srirangam by my grandmother. My father was in a transferable job and this was the reason given for my early separation from my parents. Srirangam had its own oddities and charm. Even now it has some, but today's Srirangam is not my childhood town. Except for the inner Uttra and Chitra streets and the sanctum, every thing has changed irrevocably. Every morning the Prabandam verses were afloat in our ears recited in a sing-song voice , by little Vishnava boys, thanks to a Vedapathasala established by my ancestor Kuvalagudi Singam Iyengar . This was a Charity Trust for the children of poor Iyengar families. Young and bright-eyed boys were given sustenance, along with Upanishad's and Diyva Prabandam less...

Memories of Dr.TSS Rajan

I am pleased to introduce Professor G.Rangarajan (GR), IIT Madras through my blog this week. Mr.GR has spent his first 25 years in Srirangam and was educated at The High School for boys, Srirangam and later at St.Joseph's College,Trichy. Prof GR can be reached at rangavijaya@yahoo.com Last week Mr.GR has sent me a mail which read ...."A friend and classmate of my father, by name Sri Ramaswamy, donated an autobiography by the late TSS Rajan called Ninaivu Alaigal to me.This contains an account of Srirangam as it was about a century ago.So I have translated the relevant portions into English and have sent you the word file containing this translation.TSS Rajan was a minister in the erstwhile Rajaji ministries holding charge of the portfolios of Health and Hindu Religious and Charitable endowments.He was a congressman who left a lucrative practice as a surgeon in Tiruchy to join the freedom struggle.Earlier he went to England to study medicine and was harassed by the orthodox vai...