Skip to main content

Posts

Showing posts from March, 2026

2. மெமரி உனக்கு... மூளை எனக்கு!

2. மெமரி உனக்கு... மூளை எனக்கு! 1987ல் சுஜாதா எழுதியது: ……நான் கலிபோர்னியாவில் இருக்கும்போது பல இளம் கணிப்பொறி இயலாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் தான் தைரியமாக எதிர்கால டெக்னாலஜி பற்றிப் பேசுகிறார்கள். அனைவரும் முப்பது வயதுக்குட்பட்ட வர்கள் அவர்களில் ஒரு பில்கேட்ஸ் உருவாகலாம். புதிய கம்பெனிகளின் சொந்தக்காரர்கள். அவர்களைக் கேட்டபோது, சிலர் 'இன்டர்நெட்' என்பது புத்திசாலித்தனமான இணைப்புகளாக பெரிதாக வளரும் என்றார்கள். சிலர், பயன்படுத்து பவரைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு செயல்படக் கூடிய அந்தரங்க கணிப்பொறிகள் உருவாகும் என்றனர். சிலர் குரல் அடையாளம் மிகவும் முன்னேற்றம் அடைந்து குரல் ஆணைகள் மூலமே அகில உலகமும் இயங்கும் என்றனர். சிலர் கணிப்பொறியே காணாமற் போய்விடும். இன்று பொம்மைகளுக்குள் இருக்கும் மோட்டார்களை யாரும் கவனிப்பதில்லை. அதுபோல் கணிப்பொறிகள் வாழ்வின் எல்லாச் செயல்களிலும் மறைந்திருக்கும் என்கிறார்கள்…… சுமார் 40 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த பகுதி இன்று கிட்டதட்ட நிஜமாகிவிட்டது. அறிவு, நுண்ணறிவு என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் போகிற போக்கில் க...

கூகுள் ஆண்டவரும் ஏ.ஐ ஆசாரியனும்!

கம்ப்யூட்டர் வயதுக்கு வந்துவிட்டதா ? - 1. கூகுள் ஆண்டவரும் ஏ.ஐ ஆசாரியனும்! இன்றைய நாளிதழ்களைப் புரட்டினால், தினசரி தங்க நிலவரத்துக்கு அடுத்து அதிகம் அடிபடும் வார்த்தையாக 'ஏ.ஐ' (A.I) வந்துவிட்டது. 'செயற்கை நுண்ணறிவு' என்கிற தமிழ்ச் சொல் இருந்தாலும், பீட்சா, பர்கர் மாதிரி ஏ.ஐ என்பது நம் அன்றாட வார்த்தையாகி வீட்டில் புழங்க ஆரம்பித்துவிட்டது. எல்லாவற்றுக்கும் 'கூகுள் ஆண்டவரை'க் கேட்டுக்கொண்டிருந்த காலம் மெல்ல மலையேறி, இப்போது 'ஏ.ஐ ஆசாரியன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். தினமும் செய்திதாளில், அலுவலகத்தில், நண்பர்களுடன் ஏ.ஐ குறித்து படிப்பது, பேசுவதை அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். சாதாரண பாமரனுக்கு புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே என் எண்ணம்.  நான் கல்லூரியில் படிக்கும் போது, ‘வங்கிகளில் நீங்கள் போடும் கையெழுத்தை ஒரு ஸ்கேனர் கருவி மூலம் பழைய கையெழுத்தோடு ஒப்பிட்டு, அது நிஜமா, போலியா என்று கம்ப்யூட்டரே சொல்லிவிடும்’ என்று ஒரு கட்டுரை எழுதிப் பலத்த கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன். இன்றைக்குப் பார்த்தால் அது எவ்வளவு ‘சில்லரைத்தனமான’ விஷயம் என்று எனக்...