அமரனும் அந்தணர்களும் சுஜாதா ஒரு முறை என்னிடம் ஓர் ஆங்கிலப் புத்தகத்தைப் பரிந்துரைத்தார். அந்தப் புத்தகத்தில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு எள்ளி நகையாடியிருந்தார்கள். நான் அவரிடம் இதைப் போலத் தமிழில் நீங்கள் முயலலாமே என்றேன். அதற்கு “பிராமணனாக நான் இதை எழுதினால் வீட்டுக்கு அடிக்க வருவார்கள்” என்று பதிலளித்தார். இது அவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலான பார்ப்பான்களின் நிலைமையும் இது தான். பிராமணர்கள் எதைப் பேசலாம் எதைப் பேசக் கூடாது என்று ஒரு மறைமுகக் கோடு தமிழகத்தில் கிழிக்கப்பட்டிருக்கிறது. நான் பிறக்கும் முன்பே ’பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால்…’ என்று ஒரு துவேஷப் பிரச்சாரம் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள்மூலம் விதைக்கப்பட்டது. அது இன்றும் தொடர்கிறது. குடுமி பறிபோய்விடும் என்ற பயம் இல்லாததால் இன்று சமூக ஊடகங்கள் மூலமாக இவர்களை எதிர்த்துத் தைரியமாகப் பதில் கொடுக்க முடிகிறது. பாப்பான் உயர்ந்த நிலைக்கு வந்தால் உடனே அவனை ‘பாப்பான்’ என்று வசை பாடி ‘அவாளுக்கு ஒரு பூணூலை மாட்டிவிடும் குடிசை தொழில் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. சுஜாதா, ஜெயலலிதா, ஏன் இன்றைய நீதிபதிகளை கூட அவர்கள் விட்டு வைக